முல்லரின் முழு அறிக்கையை வெளியிட உத்தரவு

வா‌ஷிங்டன்: 2016ஆம் ஆண்டு அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு குறித்து விசாரணை செய்துவந்த சிறப்பு ஆலோசகர் ராபர்ட் முல்லர் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கை அமெரிக்க காங்கிரஸ் சபையில் கடந்த வியாழக்கிழமை சமர்ப்பிக்கப் பட்டது முதல் ஜனநாயகக் கட்சியினர் அந்த அறிக்கை குறித்த தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த அறிக்கையை வெளியிட்ட முல்லர் நாடாளுமன்ற காங்கிரஸ் சபையில் எதிர்க்கட்சி உறுப் பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று நெருக்குதல் கொடுத்து வரும் ஜனநாயகக் கட்சியினர், முல்லரின் முழு அறிக்கையை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
முல்லரின் முழு அறிக்கை வரும் மே மாத முதல் தேதிக்குள் ஜனநாயகக் கட்சியினரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் நீதித்துறை குழுவின் தலைவர் ஜெரோல்டு நட்லர் நீதித்துறைக்கு ஆணை பிறப்பித்துள்ளார்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தெளிவாக இல்லாததால் அதனை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று நட்லர் கூறி யுள்ளார். அந்த அறிக்கையின் முழு பதிப்பு தங்களுக்கு தேவைப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் முல்லரின் முழு அறிக்கையை வெளியிட நீதித்துறை மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. முல்லரின் விசாரணையைத் தடுக்க அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டார் என்ற விவரங்கள் அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளன. ஆனால் நீதித் துறைக்கு தடங்கல் ஏற்படுத்தும் குற்றத்தை திரு டிரம்ப் செய்தார் என்று முல்லர் தனது அறிக்கையில் குறிப்பிடவில்லை.
2016ஆம் ஆண்டு அமெரிக்கத் தேர்தலில் தலையிட டிரம்ப்பின் பிரசாரக் குழுவினர் ரஷ்யாவுடன் சேர்ந்து சதி வேலையில் ஈடுபட்டதற்கான போதுமான ஆதாரங்கள் இல்லை என்று மத்திய புலனாய்வு அமைப்பின் முன்னாள் இயக்குநரான முல்லர் தனது அறிக்கையில் தெரிவித் துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹில்லரிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் போலி செய்திகளை ரஷ்யா வெளியிட்டது என அமெரிக்க உளவு அமைப்புகள் தெரிவித்திருந்தன.
இந்த நடவடிக்கையில் டிரம்ப்பின் பிரசாரக் குழுவினர் இருந்தனரா என்பதை முல்லரின் சிறப்பு விசாரணைக் குழு கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆராய்ந் தது. டிரம்ப்பின் தேர்தல் குழுவின் மூத்த அதிகாரிகள் ரஷ்ய அதிகாரிகளை சந்தித்தனர் என தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் இதுவரை நான்கு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருப்பினும் இது குறித்து திரு டிரம்ப் தொடர்ந்து மறுப்பு தெரிவித் துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!