இந்தோனீசியாவின் புதிய தலைநகரம் உறுதி செய்யப்படவில்லை

இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ அந்நாட்டின் தலைநகரை, கூட்ட நெரிசல் மிக்க ஜாவா தீவிலிருந்து அகற்ற முடிவு செய்திருக்கிறார். ஆனால் தலைநகருக்கான புதிய இடம் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என்று அந்நாட்டின் திட்டமிடுதல் துறைக்கான அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி நிகழ்ந்த பொதுத்தேர்தலில் திரு விடோடோ வென்றதாகத் தனியார் வாக்கெடுப்பு நிறுவனங்கள் முன்னுரைத்ததை அடுத்து திரு விடோடோ இந்த முடிவை அறிவித்தார். தேர்தலின் அதிகாரபூர்வ முடிவுகள் மே 22ஆம் தேதி வரை வெளியிடப்படமாட்டா. 

இந்நிலையில், திரு விடோடோவுக்கு எதிராகப் போட்டியிட்ட பிரபோவோ சுப்பியாண்டோ, தேர்தலின் வெற்றியாளர் தாமே எனக் கூறியிருக்கிறார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon