கிறைஸ்ட்சர்ச் துப்பாக்கிச்சூடு; மாண்டோர் எண்ணிக்கை உயர்ந்தது

கிறைஸ்ட்சர்ச் துப்பாக்கிச்சூடு; மாண்டோர் எண்ணிக்கை உயர்ந்தது

1 mins read
ac5cd73d-24d0-4dad-8a95-a95e13ab64e6
-
Google News Preferred Icon

கிறைஸ்ட்சர்ச் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 46 வயது துருக்கிய ஆடவர் உயிரிழந்ததை அடுத்து மாண்டோர் எண்ணிக்கை 51க்கு உயர்ந்தது. இந்தத் துக்கச் செய்தி துருக்கியில் மட்டுமல்லாது நியூசிலாந்து முழுவதிலும் உணரப்படும் என்று நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் தெரிவித்தார்.

அந்த ஆடவர் வியாழக்கிழமையன்று உயிரிழந்ததாக போலிசார் தெரிவித்தனர். ஆடவரின் பெயரை வெளியிட வேண்டாமென அவரது குடும்பத்தார் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்து தற்போது மருத்துவமனையில் இருக்கும் ஒன்பது பேரின் உடல்நிலை சீராக இருப்பதாகத் திருவாட்டி ஆர்டன் கூறினார்.