சுடச் சுடச் செய்திகள்

மைக் பென்ஸ்: நிலவில் கால் பதிக்கும் முதல் பெண் அமெரிக்கரே

வா‌ஷிங்டன்: நிலவில் கால் பதிக்கும் முதல் பெண் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவராகத்தான் இருப்பார் என்று அந்நாட்டுத் துணை அதிபர் மைக் பென்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நிலவில் முதன்முறையாக கால் பதித்த மனிதர் என்ற பெருமைக்குரியவரான நீல் ஆம்ஸ்ட்ராங் அமெரிக்காவைச் சேர்ந்தவர். இந்நிலையில், நிலவில் கால் பதிக்கும் முதல் பெண்மணியும் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவராகத்தான் இருக்கவேண்டும் என்று என திரு பென்ஸ் கூறியுள்ளார்.

இந்தியா உள்ளிட்ட 105 நாடுகளைச் சேர்ந்த 15,000க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பங்கேற்றுள்ள ‘சாட்டிலைட் 2019’ எனும் கருத்தரங்கு ஒன்று வா‌ஷிங்டனில் தொடங்கியுள்ளது.

இதில் கலந்துகொண்டு பேசிய திரு பென்ஸ், அதிபர் டிரம்ப்பின் வழிகாட்டுதலின் பேரில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நிலவில் கால் பதிக்கும் முதல் பெண் நிச்சயமாக அமெரிக்கராகத்தான் இருப்பார் என்று அவர் கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon