இந்தோனீசியாவில் எரிமலை சீற்றம்; 7 கி.மீ. தூரத்திற்கு சூழ்ந்த சாம்பல்

இந்தோனீசியாவில் எரிமலை சீற்றம்; 7 கி.மீ. தூரத்திற்கு சூழ்ந்த சாம்பல்

1 mins read
ac31f134-26a5-4b8a-ab00-3a3212ad57e1
சாம்பலைக் கக்கும் சினாபங் எரிமலை. படம்: ராய்ட்டர்ஸ் -
Google News Preferred Icon

கரோ: இந்தோனீசியாவின் வட சுமத்ராவில் உள்ள சினாபங் எரிமலை நேற்று முன்தினம் முதல் அதிகபடி யான சாம்பல் புகையைக் கக்கி வருகிறது. கிட்டத்தட்ட 2,460 மீட்டர் உயரம் கொண்ட சினாபங் எரிமலை குமுறுவதால் அங்கு அதிகபட்ச எச்சரிக்கை நிலையான 'ரெட் அலர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிமலை சீற்றத்தால் சுமார் ஏழு கிலோ மீட்டர் தூரம் வரை வானத்தில் சாம்பல் புகை சூழ்ந்துள்ளது. இந்தக் காட்சிகளை அருகில் உள்ள கரோ கிராமத்தில் வசிப்பவர்கள் காணொளி எடுத்துப் பகிர்ந்துள்ளனர்.

எரிமலை சீற்றத்தால் இதுவரை உயிர் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை என்றாலும் எரிமலை தொடர்ந்து அதிக அளவிலான சாம்பலை கக்கும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.