சுடச் சுடச் செய்திகள்

ஈரான்: அணுவாயுதங்கள் தயாரிக்கும் எண்ணமில்லை

தெஹ்ரான்: அணுவாயுதங்களைத் தயாரிக்கும் எண்ணமோ அதைப் பயன்படுத்தும் எண்ணமோ ஈரானுக்கு இல்லை என்று அதன் மூத்த தலைவர் ஆயத்துல்லா அலி கோமேனி கூறியுள்ளார்.

ஈரான் சென்றுள்ள ஜப்பான் பிரதமர் ‌ஷின்சோ அபேவிடம் அவர் இவ்வாறு சொன்னார்.

அணு ஆயுதச் சோதனை ஒப் பந்த மீறலில் அமெரிக்கா = ஈரான் இடையே மோதல் பெரிதாகி வருகி றது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணுவாயுத ஒப்பந்தத்தை கடுமை யாக விமர்சித்து, அந்நாட்டுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அந்நாட் டின் மீது பல பொருளியல் தடை களை அமெரிக்கா விதித்து வருகி றது.

இந்நிலையில் அமெரிக்க அதி பர் டிரம்ப்புடன் நட்புப் பாராட்டி வரும் ஜப்பான் பிரதமர் ‌ஷின்சோ அபே, ஈரானுக்கு அரசியல் ரீதி யாகச் சுற்றுப்பயணம் சென்று உள் ளார்.

நேற்று ஈரான் தலைநகர் தெஹ் ரான் சென்றடைந்த ‌ஷின்சோ அபேவை ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் சாரிஃப், மெக்ராபாத் விமான நிலையத்தில் வரவேற்றார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon