கவர்ச்சி அழகி மருத்துவருக்கு மியன்மார் அரசு தடை

பிக்கினி ஆடை மாடலாக மாறியதற்காக மியன்மார் மருத்துவர் நாங் முவி சான்  மருத்துவம் பழக மியன்மார் மருத்துவ மன்றத்தால்  அண்மையில் தடை செய்யப்பட்டார்.

மியன்மாரின் கலாசாரத்திற்கும் வழமைக்கும் புறம்பான வகையில் ஆடைகள் உடுத்தி அதை வெளிப்படையாக இணையத்தில் தமது ஃபேஸ்புக் தளத்தில் வெளியிட்டதற்காக அந்த தடை விதிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் மருத்துவராகப் பணியாற்றி வந்த நாங் முவி சான் கடந்த 2017ஆம் ஆண்டு பிக்கினி ஆடை மாடலாக மாறினார்.

நோயாளிகளுக்குச் சிகிச்சை வழங்கும்போது தாம் இப்படி ஆடைகள் அணிந்துகொள்வதில்லை என்றும் இந்த தடை தனி மனித கருத்துச் சுதந்திரத்துக்குப் புறம்பானது என்றும் டாக்டர் நாங் கூறியுள்ளார்.

இந்த தடைக்கு எதிராக தாம் மேல்முறையீடு செய்யவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.