தண்ணீரில் நெகிழி துகள்கள்

சூரிக்: தூக்கி வீசப்பட்ட நெகிழி போத்தல், பைகள் போன்றவற்றின் நெகிழி துகள்கள் உலக முழுவதும் தண்ணீரில் கலந்துள்ளன என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் உலக மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுமா என்பதை நிர்ணயிக்க அதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அது வலியுறுத்தியுள்ளது.