மருத்துவமனையில் தீ: பத்துப் பேர் பலி

ரியோ டி ஜெனிரோ: பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் மாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது பத்துப் பேர் மாண்டுபோனதாக பிபிசி செய்தி தெரிவிக்கிறது. தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஜெனரேட்டரில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

Loading...
Load next