ஜேம்ஸ் மெட்டிஸ்: சிரியாவைவிட்டு டிரம்ப் அகலும்போது ஐஎஸ் மீண்டும் தலைதூக்கலாம்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நினைப்பதுபோல் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் முற்றிலும் ஒடுக்கப்படவில்லை என்று அமெரிக்காவின் முன்னாள் தற்காப்பு அமைச்சர் ஜேம்ஸ் மெட்டிஸ் தெரிவித்திருக்கிறார். சிரியாவிலிருந்து அதிபர் டிரம்ப் அமெரிக்க துருப்புகளை கடந்த ஆண்டு திடீரென வெளியேற்றியதைத் தொடர்ந்து அப்போது தற்காப்பு அமைச்சராக இருந்த திரு மெட்டிஸ் தெரிவித்தார்.

“போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்பும் நாம் போர் முடிந்துவிட்டது என்றுகூட கூறிவிட முடியும்,” என்று திரு மெட்டிஸ் அமெரிக்க ஒளிவழி என்பிசியிடம் பேட்டி ஒன்றில் கூறினார். “ஈராக்கிலிருந்து ராணுவப் படைகளை வெளியேற்றி பின் அதன் விளைவுகளை உணர்ந்து அவதிப்பட்ட அதிபர் ஒபாமாவைப் போல நீங்களும் துருப்புகளை வெளியேற்றலாம். ஆனால் ராணுவத்தில் நாங்கள் கூறுவதுபோல் அது எதிரிக்கான வாக்கு” என்றார் திரு மெட்டிஸ்.

இதற்கு மேலாக, குர்திய போராளிகளுக்கு உதவி செய்திருந்த அமெரிக்க துருப்புகளை மீட்க திரு டிரம்ப் கடந்த வாரம் எடுத்திருந்த முடிவால் நிலவரம் மிகவும் பதற்றமாக இருப்பதாகத் திரு மெட்டிஸ் தெரிவித்தார். அமெரிக்கப் படைகளை திரு டிரம்ப் உடனே வெளியேற்றியதை அடுத்து துருக்கி, வடமேற்கு சிரியாவுக்குத் தனது படையிரை குர்திய கிளர்ச்சியாளர்களுடன் போரிட அனுப்பியது.

அமெரிக்க ராணுவப் படையினரைச் சொந்த நாட்டுக்கு வரவழைக்கும் காலம் வந்துவிட்டதாகத் தெரிவித்த திரு டிரம்ப் “தோற்கடிக்கப்பட்ட அனைவரையும் அவர்கள் தோற்கடித்துவிட்டனர்,”என்றார்.

ஆயினும், நிலைமை இதுவல்ல என்று திரு மெட்டிஸ் தெரிவித்தார். “அழுத்தத்தை நாங்கள் தொடராவிட்டால் ஐ.எஸ் மீண்டும் தலைதூக்கும்,” என்று தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!