சவூதி அரேபியாவில் விபத்து; 35 வெளிநாட்டவர்கள் பலி

 

சவூதி அரேபியாவிலுள்ள மதினா நகரில் லாரியுடன் பேருந்து ஒன்று மோதியதில் 35 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்தது.  

முஸ்லிம்கள் புனிதமாகக் கருதும் நகரங்களான மதினாவையும் மக்காவையும் இணைக்கும் சாலையில் இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. 

மாண்ட அனைவரும்  யாத்ரீகர்கள் என்று சவூதி பிரஸ் ஏஜன்சி நாளிதழ் தெரிவித்தது. அவர்களில் பலர் ஆசியாவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.  

யாத்ரீகர்கள் சென்றுகொண்டிருந்த பேருந்து தீப்பிழம்பானதைக் காட்டும் படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.