சிங்கப்பூர், நியூசிலாந்து தற்காப்பு அமைச்சர்கள் கூட்டம்

சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென்னும் நியூசிலாந்து தற்காப்பு அமைச்சர் ரோன் மார்க்கும் நேற்று தற்காப்பு அமைச்சு தலைமையகத்தில் சிங்கப்பூர்-நியூசிலாந்து தற்காப்பு அமைச்சர்கள் கூட்டத்தை நடத்தினர்.

இவ்வாண்டு மே மாதத்தில் கையெழுத்தான இருநாட்டு மேம்பட்ட தற்காப்பு பங்காளித்துவ உடன்பாட்டின் தொடர்பில் இச்சந்திப்பு நடத்தப்பட்டதாக தற்காப்பு அமைச்சு கூறியது.

நியூசிலாந்தில் சிங்கப்பூர் ஆயுதப்படைகள் பயிற்சி மேற்கொள்வதற்கும் நியூசிலாந்து தற்காப்புப் படைகளுடன் கூட்டு பயிற்சி நடத்துவதற்கும் வசதிகள் ஏற்படுத்திக்கொடுத்து வரும் அந்நாட்டுக்கு சிங்கப்பூர் சார்பில் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங்.