தீயணைப்பாளர்கள்: காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது

சிட்னி: ஆஸ்திரேலியாவில் கடந்த  ஒரு மாதத்திற்கும் மேலாக கட்டுக்கடங்காமல் பரவி வந்த காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தீயணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏனெனில் ஈரப்பதமான வானிலை காட்டுத்தீயால் பலத்த சேதமடைந்திருந்த கிராமப்புற மக்களுக்கு ஓரளவு நிம்மதி அளித்தது.

சிட்னியின் வடமேற்கு புறநகரில் இருக்கும் மிகப்பெரிய கோஸ்பர்ஸ் மலை பெருந்தீக்கு எதிரான போராட்டத்தில் தங்களின் கை ஓங்கியிருப்பதாக நியூ சவுத் வேல்ஸ் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர், கிட்டத்தட்ட கடந்த மூன்று மாதங்களாக கட்டுப்பாட்டை மீறி இங்கு தீ பரவி வந்தது.

நேற்று நியூ சவுத் வேல்ஸ் கிராமப்புற தீயணைப்பு சேவை ஆணையர் ஷேன் ஃபிட்ஸ்சிம்மன்ஸ், “சிறிய எரியும் பகுதி இன்னும் முடிவடைய வேண்டியுள்ளது,” என்றாலும் ‘தீயை கட்டுப்படுத்துவதற்கான முன்கணிப்பு நம்பிக்கைக்குரியதாக தோன்றுகிறது’ உள்ளது என்றார்.

பெருமளவில் பரவிய காட்டுத்தீ, மொத்தம் 800,000 ஹெக்டேருக்கு மேல் எரித்தது.

குடியிருப்பாளர்களும் அதிகாரிகளும் தொடர்ந்து   பேரழிவின் பிடியில் சிக்கியுள்ள  நிலையில், தீ பற்றி எரியும் சில இடங்களில் அடுத்த வாரம் 50 மி.மீ வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

“அந்த முன்னறிவிப்புபடி மழை பெய்தால், இது எங்கள் கிறிஸ்துமஸ், பிறந்த நாள், நிச்சயதார்த்தம், ஆண்டுவிழா, திருமண மற்றும் பட்டமளிப்பு பரிசுகள் அனைத்தும் ஒன்றாக உருவாகும்,” என்று நியூ சவுத் வேல்ஸ் கிராமப்புற தீயணைப்பு சேவையாளர்கள் சொன்னார்கள்.