பிளாஸ்டிக் பை பயன்பாட்டைக் குறைக்க சீனா நடவடிக்கை

பெய்ஜிங்: சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பைகளின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை படிப்படியாக குறைப்பதற்கான திட்டத்தை சீனா வெளியிட்டுள்ளது.

இந்த திட்டத்தின்படி அடுத்த ஐந்து ஆண்டுகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு முற்றிலும் தடை விதிக்கவோ அல்லது பெருமளவு குறைக்கவோ முடியும் என்கிறது சீனா.

இத்திட்டத்தின்படி ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பை  உற்பத்தி, விற்பனை இவ்வாண்டு  இறுதிக்குள் தடை செய்யப்படும். 

பிளாஸ்டிக் மைக்ரோபீட்கள் கொண்ட தினசரி ரசாயனங்களுக்கு 2020க்குள் உற்பத்தி தடை செய்யப்படும். 2022 க்குள் விற்பனை நிறுத்தப்படும். இது தவிர கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் பிளாஸ்டிக்கிற்கும் தடை விதிக்கப்படும். 

Loading...
Load next