தைவானில் கடும் கட்டுப்பாடு

தைவான்: வூஹான் கிருமித்தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கில் சீனச் சுற்றுப்பயணிகளுக்கு தைவான் கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

வர்த்தகப் பயணிகள், தைவான் நாட்டவர்களை மணந்தவர்கள் உள்ளிட்டவர்களைத் தவிர்த்து மற்ற சீனப் பயணிகளுக்கு நுழைவு அனுமதி மறுக்கப்படுகிறது. வர்த்தகப் பயணிகள் அனுமதிக்கப்பட்டாலும் அவர்களின் உடல்நிலை இரு வார காலத்திற்குக் கண்காணிக்கப்படும்.

ஹுபே மாநிலத்தவர் தைவானுக்குள் நுழைய ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சீனாவுடன் அணுக்கமான பொருளியல், கலாசார உறவு கொண்டுள்ள தைவானில் இதுவரை மூவருக்கு வூஹான் கிருமித்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

Loading...
Load next