ஆக வெப்பமான ஜனவரி மாதம்

வாஷிங்டன்: சென்ற ஜனவரி வரலாற்றில் ஆக வெப்பமான ஜனவரி மாதமாக பதிவாகியுள்ளதாக அமெரிக்க பருவநிலை அமைப்பு தெரிவித்துள்ளது.

இது கடந்த 2016ஆம் ஆண்டு பதிவான ஆக அதிக வெப்பமான ஜனவரி மாதத்தைவிட 0.04 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகம்.

நில, கடல் பரப்பளவின் வெப்பநிலை 20ஆம் நூற்றாண்டின்  மொத்த சராசரியான 53.6 டிகிரி ஃபாரன்ஹீட்டைவிட (12 செல்சியஸ்) 2.05 டிகிரி உயர்ந்தது.

கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பருவநிலை கண்காணிப்பு அைப்பு வெளியிட்ட தகவலை இது உறுதிப்படுத்துகிறது.

ரஷ்யாவின் பெரும் பகுதி, ஸ்காண்டிநேவியா, கிழக்கு கனடாவின் சில பகுதிகளில்  வெப்பநிலை சராசரியைவிட ஒன்பது டிகிரி அதிகமாக இருந்தது.

ஜனவரி மாதத்தில் ஆர்க்டிக் கடலின் பனி அளவானது, 1981ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரையிலான சராசரியைவிட 5.3 விழுக்காடு குறைவாகவும் அண்டார்டிக் பகுதியின் பனி அளவு 9.8 விழுக்காடு குறைவாகவும் இருந்தது.

இதற்கிடையே, அண்டார்டிகாவில்  வெப்பநிலை முதல்முறையாக 20 டிகிரி செல்சியசைத் தாண்டியுள்ளது.  

அண்டார்டிகாவில் நேற்று 20.75 டிகிரி செல்சியல் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக பிரேசில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய  பூமி வெப்பமயமாதலுக்கு மனிதனால் உருவாக்கப்பட்ட கிரீன்ஹவுஸ் வாயு ெவளியேற்றம் ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

சென்ற பத்தாண்டுகளில்  2016ஆம் ஆண்டிற்குப் பிறகு, 2019ஆம் ஆண்டு இரண்டாவது ஆக வெப்பமான ஆண்டாக பதிவானதாக  கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் சபை கூறியிருந்தது.

இந்நிலையில் ஆக வெப்பமான ஜனவரி மாதம் என்பது வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருவதை தெளிவாக உணர்த்துகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இதனால் கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் கடலோர நாடுகளில்  கடல்நீர் உட்புக வாய்ப்புள்ளன. 

குறிப்பாக பசிபிக் பெருங்கடலின் எதிர்த்திசைகளில் உள்ள  சான் பிரான்சிஸ்கோவும், மணிலாவும் பெரும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon