பிரிட்டனை உலுக்கிவரும் டென்னிஸ் புயல்; மக்கள் தவிப்பு

லண்டன்: பிரிட்டனின் பல பகுதிகள் டென்னிஸ் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. புயல் காரணமாக பல இடங்களில் கனமழை பெய்கிறது. பலத்த காற்று காரணமாக அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

ஸ்காட்லாந்து எல்லைப் பகுதிக்கு அருகே கார் ஒன்றை வெள்ளம் அடித்துச் சென்றது.

அந்தக் காரில் இருந்த இருவரை மீட்புப் பணியாளர்கள் மீட்டனர். பல இடங்களில் வெள்ளத் தடுப்புகளை அமைக்க குடியிருப்பாளர்களுக்கு பிரிட்டிஷ் ராணுவம் உதவியது.

வெள்ளம் மோசமடையக்கூடும் என்று பிரிட்டனின் சுற்றுப்புற வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த வாரயிறுதியில் வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்தது. 500,000க்கும் மேற்பட்டோர் மின்சாரம் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது.