ஜான்சனுக்குப் பின்னடைவு

லண்டன்: பிரிட்டனில் பெருஞ்சேதத்தையும் கடும் வெள்ளப்பெருக்கையும் ஏற்படுத்திய டென்னிஸ் புயல் தொடர்பாக பிரதமர் போரிஸ் ஜான்சனின் நடவடிக்கைகள் அவரது கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் பின்னடைவை ஏற்படுத்தி

உள்ளது. 

டென்னிஸ் புயலுக்குப் பிறகு வெள்ளம் சூழ்ந்த எந்தவொரு பகுதியையும் பார்வையிட எந்த திட்டமும் இல்லை என்று அவரது அலுவலகம் கூறியதையடுத்து ஜான்சன் கடும் விமர்சனங்களுக்கு ஆளானார்.

நாடு முழுவதும் வெள்ள எச்சரிக்கைகள் நடைமுறையில் இருந்தன, ஆனால் ஜான்சன் நிலைமையைப் பற்றி விவாதிக்க கோப்ரா என அழைக்கப்படும் அரசாங்கத்தின் அவசரக் குழுவின் கூட்டத்தை அழைக்கவில்லை.

அரை மாதத்திற்கு பெய்ய வேண்டிய மழை, சில பகுதிகளில் ஒரே நாளில் பெய்து தீர்த்தது.  ஆறுகள் நிரம்பி வழிந்தன.