உலகின் ஆக வயதானவர் காலமானார்

தோக்கியோ: உலகிலேயே ஆக வயதுடைய மனிதராக அறியப்பட்டவர் தமது 112 வயதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

ஜப்பானைச் சேர்ந்த சிட்டெட்ஸூ வடனாபே என்பவர் நீயிகதா நகரில் கடந்த 1907ஆம் ஆண்டு பிறந்தவர். நீண்டநாள் வாழ்ந்த இவரது சாதனைக்காக, அந்நகரில் உள்ள மூத்தோர்

பராமரிப்பு மையம் ஒன்றில் இவருக்கு கின்னஸ் சாதனை அமைப்பின் சார்பாக இம்மாதம் 12ஆம் தேதி சான்றிதழ் அளிக்கப்பட்டது.

தற்போது 112 ஆண்டுகள் 344 நாட்கள் வயதாகும் இவர்தான் தற்போது வரை உலகின் ஆக வயதான மனிதராக அங்கீகரிக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் காலமாகிவிட்டதாக கின்னஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.