ஹாங்காங் கலவரத் தடுப்பு போலிசார் பணிக்குத் திரும்பினர்

ஹாங்காங்: ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவாளர்களின் போராட்டங்கள் வெகுவாகக் குறைந்துவிட்டதால் கலவரத் தடுப்பு போலிசார் தங்களுடைய அன்றாட வழக்கமானப் பணிக்குத் திரும்பி உள்ளனர்.

குற்றத் தடுப்பு, போக்குவரத்து கட்டுப்பாடு போன்ற பணிகளில் அவர்கள் ஈடுபடத் தொடங்கினர். கடந்த ஏழு மாதங்களாக ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவாளர்களின் தொடர் போராட்டத்தினால் கலவரப் பூமியானது. தற்போது கலவரங்கள் குறைந்துவிட்டன.