பாகிஸ்தானில் கொரோனா கிருமித்தொற்றுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கிருமித்தொற்றால் உயிரிழப்பு

பாகிஸ்தானிலும் தற்போது கொரோனா கிருமித்தொற்று வேகமாக பரவி வருகிறது. அங்கு கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைப் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து வந்த இளம் மருத்துவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

உலகையே அச்சுத்தி வரும் கொரோனா கிருமித்தொற்றால் இதுவரை உலகம் முழுவதும் 16,500க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; 381,649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் கொரோனா கிருமித்தொற்று 892 பேருக்கு பரவி உள்ளது. அங்குள்ள சிந்த் மாகாணம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானிலேயே சிந்த் மாகாணத்தில்தான் அதிகபட்சமாக 399 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் அங்கு சுமார் 150 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இதுவரை ஒரு மருத்துவர் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு ஆறு பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

உயிரிழந்த மருத்துவர் உஷாமா ரியாஸ், பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.

கொரோனா அறிகுறி உள்ள நோயாளிகளை சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பரிசோதித்ததால் அவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

பலரையும் கிருமித்தொற்றில் இருந்து காப்பாறிய மருத்துவரே கொரோனா தாக்குதலுக்கு பலியானது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

#பாகிஸ்தான் #கொவிட்-19

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!