தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனம்

பேங்­காக்: தாய்­லாந்து பிர­த­மர் பிரயுத் சன்-ஒ-சா நாடு முழுவதும் அவ­ச­ர­நிலை அறி­வித்­துள்­ளார்.

அது மட்­டு­மல்­லா­மல் பல்­வேறு கட்­டுப்­பா­டு­க­ளுக்­கும் அவர் உத்­த­ர­விட்­டுள்­ளார். கடந்த 24 மணி நேரத்­தில் 107 புதிய கிரு­மித் தொற்று சம்­ப­வங்­கள் ஏற்­பட்­டுள்­ள­தால் தாய்­லாந்து பிர­த­மர் இந்த அதி­ரடி நட­வ­டிக்­கை­களை எடுத்துள் ளார். புதன்­கி­ழமை நள்­ளி­ரவு அம­லுக்கு வரும் அவ­ச­ர­நிலை ஏப்­ரல் 30ஆம் தேதி வரை நீடிக்­கும்.

தாய்­லாந்­துக்­குள் விமா­னம், நிலம், கடல் வழி­யாக நுழையவும் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால் பொருள் ஏற்­று­மதி/ இறக்­கு­மதி, தூதர்­கள், வேலை அனு­மதிச் சீட்டு வைத்­துள்ள ஊழி­யர்­கள், தாய்­லாந்து குடி­மக்­கள் ஆகி­யோ­ருக்குப் பய­ணத் தடை­யி­லி­ருந்து விலக்கு அளிக்­கப்­பட்­டுள்­ளது. இரவு விடு­தி­கள், விளை­யாட்டு திடல்­கள், உடற்­பி­டிப்பு நிலை­யங்­கள், உடற்­ப­யிற்­சிக் கூடங்­கள் போன்ற இடங்­களில் அதிக மக்­கள் கூடு­வ­தால் அவற்றை மூட உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. அவ­ச­ர­நிலை சட்­டத்­தின் கீழ் அத்­தி­யா­வ­சி­ய­மான உண­வுப் பொருட்­கள், குடி­நீர், மருந்து ஆகி­ய­வற்றை பதுக்குவது குற்­றம் என்­றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஐந்து வய­துக்கு உட்­பட்ட குழந்­தை­கள், எழு­பது வய­துக்கு மேற்­பட்ட முதி­ய­வர்­கள் எளி­தில் கிரு­மித் தொற்­றுக்கு ஆளா­கி­ விடுவார்கள் என்­ப­தால் வீட்­டை­விட்டு வெளி­யேற வேண்­டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!