அமெரிக்காவில் கிருமிக்கு 1,000 பேருக்கு மேல் பலி

வாஷிங்­டன்: அமெ­ரிக்­கா­வில் கொரோனா கிரு­மித்­தொற்று மர­ணங்­கள் 1000க்கு மேல் தாண்­டி­விட்­டன. இது போதா­தென்று அந்­நாட்­டில் கொரோனா கிரு­மி தொடர்ந்து பரவி வரு­கிறது.

அமெ­ரிக்­கா­வில் கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக பிப்­ர­வரி 29ல் முதல் மர­ணம் நிகழ்ந்து­ வருகிறது. அதன் பிறகு கடந்த இரண்டு வாரங்­களில் மரண அளவு கிடு­கி­டு­வென கூடி­விட்­டது.

கொரோ­னா­வைத் துடைத்து ஒழிக்க மிகப்பெரிய அள­வில் பொது சுகா­தார நட­வ­டிக்­கை­கள் இடம்­பெ­றும் சூழ­லில் மர­ணங்­க­ளைத் தடுக்க இய­ல­வில்லை.

அமெ­ரிக்­கா­வில் செவ்­வாய்க்­ கி­ழமை மரண எண்­ணிக்கை 600 ஆக இருந்­தது. புதன்­கி­ழமை பலி 900 பேராகி வியா­ழக்­கி­ழமை 1050க்கு உயர்ந்து விட்­ட­தாக ஜான் ஹாப்­கின்ஸ் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் புள்­ளி­வி­வ­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

அமெ­ரிக்க மாநி­லங்­களிலும் நகரங்களிலும் வீட்­டி­லேயே இருக்­கும்­படி மக்­க­ளுக்கு உத்­த­ர­வு இடப் பட்டுள்ளது. பல பாது­காப்பு அரண்­களும் அமைக்கப்பட்டுள்ளன. நாடு முழு­வ­தும் பரி­சோ­த­னை­கள் முடுக்கி­வி­டப்­பட்டு உள்ள நிலை­யில் தொடர்ந்து கொரோனா தொற்று கூடி­வ­ரு­கிறது.

அமெ­ரிக்­கா­வில் கொரோனா கிரு­மியால் 69,000 பேருக்­கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்­வே­ளை­யில், நியூ­யார்க் நக­ரில் கொரோனா கிரு­மித்­தொற்­று மர­ணங்­கள் இன்­ன­மும் அதி­க­ரித்து வரு­வ­தாக அர­சாங்க இணை­யத் தளம் புதன்­கி­ழமை அபா­யச் சங்கு ஊதி­யது.

அந்த நக­ரில் விளை­யாட்­டுத் திடல்­களை மூடி­விட நகர ஆளு­நர் உத்­த­ர­விட்­டுள்­ளார். நகர வீதி­க­ளைப் போக்­கு­வ­ரத்­துக்கு மூடி­வி­ட­லாம் என்ற யோசனையை அவர் முன்­வைத்­துள்­ளார்.

அந்த மாநி­லத்­தில் புதன்­கி­ழமை நில­வ­ரப்­படி 30,611 பேரை கொரோனா கிரு­மி­கள் தொற்றி இருந்­தன. புதன்­கி­ழமை புதி­தாக 5,000 பேர் பாதிக்­கப்­பட்­ட­னர்.

நியூயார்க் நகரில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,000 பேர் உடலில் கிருமி புகுந்துள்ளது.

அந்த நகரில் 17,000 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது. கொரோனா தொற்றுக்காரணமாக நியூயார்க் நகரில் ஏறக்குறைய 199 பேர் மாண்டுவிட்டனர்.

இதனிடையே, அதிகரிக்கும் கொரோனா கிருமிகளைக் கையாள அமெரிக்காவின் செனட் சபை, US$2 டிரில்லியன் உதவித் திட்டத்தை அங்கீகரித்தது.

அதில் மருத்துவமனைகளுக்கும் மருந்தக நிலையங்களுக்கும் ஒதுக்கப்படும் US$ 150 பில்லியன் தொகையும் அடங்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!