‘அறிகுறியின்றி கிருமி தொற்றியவர்களால் கிருமிப் பரவல் பன்மடங்காகும் அபாயம் உள்ளது’

நியூ­யார்க்: கொரோனா கிருமி தொற்­றிய 25 விழுக்­காட்­டி­னர், அத­னால் எவ்­வி­தத் தொந்­த­ர­வும் அறி­கு­றி­களும் இல்­லை­யென்­ப­தால் தங்­க­ளுக்கே தெரி­யா­மல் பல­ருக்கு கிரு­மி­யைப் பரப்பி வரு­கின்­ற­னர். இத­னால் ஏற்­ப­டக்­கூ­டிய விளைவு மிக­மோ­ச­மா­ன­தாக இருக்­கும். அவர்­க­ளால் கிரு­மிப்­ப­ர­வல் பெரு­மளவு அதி­க­ரிக்­க­லாம் என்று அமெ­ரிக்­கா­வின் நோய்க் கட்­டுப்­பாடு மற்­றும் தடுப்பு நிலை­யம் கடுமையாக எச்­ச­ரித்­துள்­ளது.

இது­போன்­ற­வர்­கள் முகக்­க­வ­சம் அணி­வ­தைக் கட்­டா­ய­மாக்­கு­வது குறித்து அந்த நிலை­யம் பரி­சீ­லித்து வரு­வதாகத் தெரிவித்துள்ளது. இத­னால் கிரு­மிப் பர­வ­லின் வேகத்­தைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யும் என்று அந்­நி­லை­யத்­தின் இயக்­கு­நர் டாக்­டர் ராபர்ட் ரெட்­ஃபீல்ட் ஒரு தொலைக்­காட்­சிக்கு அளித்த பேட்­டி­யில் தெரி­வித்­தார்.

காய்ச்­சல், இரு­மல் போன்ற எவ்­வித அறி­கு­றி­யும் இல்­லா­த­வர்­கள் முகக்­க­வ­சம் அணி­யத் தேவை­யில்லை. இருப்­பி­னும் சில­ருக்கு காய்ச்­சல், இரு­மல் போன்ற நோய்க்­கான அறி­குறி எது­வும் இல்­லா­மல் கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டி­ருக்­க­லாம் என்­பதை புதிய ஆய்வு காட்­டு­வ­தாக டாக்­டர் ராபர்ட் கூறி­னார். அவ்­வாறு பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் பல­ருக்குக் கிரு­மித் தொற்றை பரப்­பிய பின்­னர் அவர்­க­ளுக்கு காய்ச்­சல், இரு­மல் போன்ற அறி­கு­றி­கள் வரத் தொடங்­க­லாம் என்று அவர் கூறி­னார்.

ஆனால் இது­போன்று எத்­தனை பேர் பாதிக்­கப்­பட்­ட­னர் என்று அந்த ஆய்­வா­ளர்­கள் கூற­வில்லை என்­றார் டாக்­டர் ராபர்ட்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!