‘சொகுசுக் கப்பல் பயணிகள் ஃபுளோரிடாவில் வெளியேற்றப்படுவர்’

வாஷிங்­டன்: நங்­கூ­ர­மிட துறை­முகம் கிடைக்­காத இரு சொகுசுக் கப்­பல்­க­ளுக்கு ஃபுளோரிடா துறை­மு­கத்­தில் இடம் தரப்­படும் என்று அமெ­ரிக்க அதி­பர் டோனல்ட் டிரம்ப் தெரி­வித்­துள்­ளார்.

ஸேன்­டம், ரோட்­டர்­டாம் ஆகிய சொக­சுக் கப்­பல்­கள் அமெ­ரிக்­கக் கடற்­ப­கு­திக்­குள் வர­வி­ருக்­கின்­றன.

ஸேன்­டம் சொகுசுக் கப்­ப­லில் உள்ள பல பய­ணி­க­ளுக்கு கொரோனா கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது.

இதன் கார­ண­மாக பல துறை­மு­கங்­கள் அக்­கப்­பலை ஏற்க மறுத்­து­விட்­டன. இவ்­வி­ரண்டு கப்­பல்­கள் ஃபுளோரிடா துறை­மு­கத்­தில் நங்­கூ­ர­மிட்­ட­தும் அவற்­றுக்­குள் மருத்­துவ அதி­கா­ரி­கள் அனுப்­பி­வைக்­கப்­ப­டு­வர் என்று அதி­பர் டிரம்ப் தெரி­வித்­தார்.

கப்­பல்­களில் இருப்­ப­வர்­கள் வெளி­யேற்­றப்­ப­டு­வர் என்­றும் வெளி­நாட்­டி­னர் அவர்­க­ளது நாடு­க­ளுக்கு அனுப்­பி­வைக்­கப்­ப­டு­வர் என்­றும் திரு டிரம்ப் கூறி­னார்.

போர் விமா­னங்­களை ஏற்­றிச் செல்­லும் அமெ­ரிக்­கப் போர்க்­கப்­ப­லான ரூச­வெல்ட்­டில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் 93 கட­லோ­டி­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இக்­கப்­ப­லில் உள்ள கட­லோ­டி­களை அமெ­ரிக்­கக் கடற்­படை வெளி­யேற்றி வரு­வ­தாக வெள்ளை மாளிகை நேற்று தெரி­வித்­தது.

இதற்­கி­டையே, கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர், மர­ண­ம­டைந்­தோர் ஆகி­யோர் தொடர்­பான உண்­மை­யான எண்­ணிக்­கையை சீனா மறைத்­தி­ருக்­கும் சாத்­தி­யம் இருப்­ப­தாக அதி­பர் டிரம்ப் சந்­தே­கம் தெரி­வித்­துள்­ளார்.

சீனா வெளி­யிட்ட பாதிப்­ப­டைந்­தோர், மரண எண்­ணிக்கை குறை­வாக இருப்­ப­தா­க­வும் அவை நம்­பும்­படி இல்லை என்­றும் அவர் கூறி­னார்.

இருப்­பி­னும், சீனா­வு­டன் அமெ­ரிக்­கா­வின் உறவு வலு­வாக இருப்­ப­தாக அவர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!