கொவிட்-19: அடையாளம் காணப்பட்ட 40,000 பேர்

கோலா­லம்­பூர்: கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளு­டன் தொடர்­பில் இருந்த 40,000 பேர் கொண்ட சங்­கி­லியை மலே­சிய போலி­சார் அடை­யா­ளம் கண்­டுள்­ள­னர்.

இவர்­களில் தப்­லிக் ஜமாத் குழு­ம­மும் அடங்­கும் என்று பெர்­னாமா செய்தி நிறு­வ­னம் நேற்று தெரி­வித்­தது.

கிடைத்த தர­வு­களை குற்­ற­வி­யல் புல­னாய்­வுத் துறை­யைச் சேர்ந்த பணிக் குழு ஆராய்ந்­த­தாக மலே­சி­யப் போலிஸ் படைத் தலை­வர் அப்­துல் ஹமீது பாடோர் கூறி­னார்.

தர­வு­களை சுகா­தார அமைச்சு கொடுத்­த­தாக அவர் தெரி­வித்­தார். அதன் மூலம் கொவிட்-19 எனப்­படும் கொரோனா கிரு­மித்­தொற்­றுக்­கான மருத்­து­வப் பரி­சோ­த­னைக்கு செல்ல வேண்­டி­ய­வர்­களை போலி­சார் அடை­யா­ளம் கண்­டி­ருப்­ப­தாக அவர் கூறி­னார்.

“அண்­மை­யில் ஸ்ரீ பெட்­டா­லிங் பள்­ளி­வா­ச­லில் நடை­பெற்ற சமய நிகழ்­வில் கலந்­து­கொண்டு ஏறத்­தாழ 11,000 தப்­லிக் ஜமாத் உறுப்­பி­னர்­களை அடை­யா­ளம் காண நாங்­கள் சுகா­தார அமைச்­சுக்கு உத­வி­யுள்­ளோம்,” என்று இன்ஸ்­பெக்­டர் ஜென­ரல் ஹமீது கூறினார்.

“கிடைத்த தர­வு­க­ளைக் கொண்டு குறிப்­பிட்ட சில அணுகு­ மு­றை­க­ளைப் பயன்­ப­டுத்தி கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரு­டன் தொடர்­பில் இருந்­த­வர்­கள் பாதிக்­கப்­படும் அபா­யத்­தில் இருப்­ப­வர்­கள் ஆகி­யோரை நாங்­கள் அடை­யா­ளம் கண்­டுள்­ளோம்.

“சம்­பந்­தப்­பட்ட தனி­ந­பர்­களை நாங்­கள் அடை­யா­ளம் கண்­டு­விட்­டோம். அவர்­க­ளது முக­வரி, தொலை­பேசி எண்­கள், அடை­யாள அட்டை எண்­கள், ஆகி­ய­வற்றை நாங்­கள் கண்­டு­பி­டித்­து­விட்­டோம்,” என்­றார் அவர்.

தப்­லிக் ஜமாத் உறுப்­பி­னர்­கள் பல­ருக்கு மருத்­து­வப் பரி­சோ­தனை செய்­து­விட்­ட­தாக குறிப்­பிட்ட திரு ஹமீது, அவர்­க­ளுக்கு எதி­ராக கருத்­து­க­ளைத் தெரி­விக்க வேண்­டாம் என்று கூறி­னார்.

வெளி­நா­டு­களில் இருக்­கும் தப்­லிக் ஜமாத் உறுப்­பி­னர்­களைப் பற்றிய விவ­ரங்­க­ளை­யும் சேக­ரித்து வரு­வ­தாக அவர் தெரி­வித்­தார். அவர்­க­ளைப் பற்றிய விவ­ரங்­கள் குடி­நு­ழை­வுத் துறை­யி­டம் ஒப்­ப­டைக்­கப்­படும் என்­றார் அவர்.

அவர்­கள் மலே­சியா திரும்­பி­ய­தும் தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்க இது உத­வும் என்று திரு ஹமீது கூறி­னார்.

இதற்­கி­டையே, கொரோனா கிரு­மித்­தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்த ஜோகூர் மாநி­லம் எங்­கும் 54 தனி­மைப்­ப­டுத்­தும் நிலை­யங்­களை அம்­மா­நில அர­சாங்­கம் அமைத்­துள்­ளது.

நேற்று முன்­தி­னம் நில­வ­ரப்­படி 14 தனி­மைப்­ப­டுத்­தும் நிலை­யங்­கள் இயங்கி வரு­வ­தாக ஜோகூர் மாநி­லத்­தின் சுகா­தார, சுற்­றுப்­பு­றக் குழுத் தலை­வர் ஆர்.வித்­யா­னந்­தன் தெரி­வித்­தார்.

“தேவை ஏற்­பட்­டால் தனி­மைப்­ப­டுத்­தும் இடங்­க­ளாக மாற்ற ஏது­வான மற்ற இடங்­கள் அடை­யா­ளம் காணப்­படும். ஹோட்­டல்­களும் தனி­யார் கட்­ட­டங்­களும் இவற்­றில் அடங்­கும்,” என்­றார் காஹாங் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரு­மான திரு வித்­யா­னந்­தன்.

முகக்­க­வச மோச­டி­கள்

கொரோனா கிரு­மித்­தொற்று மோச­ம­டைந்து வரும் வேளை­யில், மற்ற நாடு­க­ளைப் போலவே மலே­சி­யா­வி­லும் முகக்­க­வ­சங்­க­ளுக்­கான தேவை அதி­க­ரித்­துள்­ளது.

மக்­க­ளின் பதற்­றத்­தைப் பயன்­ப­டுத்தி அவர்­க­ளி­டம் முகக்­க­வசங்­களை விற்­ப­தா­கக் கூறி பணம் பறித்­த­வர்­களில் 39 பேரை மலே­சிய போலி­சார் கைது செய்­துள்­ள­னர். இத்­த­கைய மோசடி தொடர்­பாக 556 வழக்­கு­கள் பதி­வா­கி­யுள்­ளன. மொத்­தம் 4.2 மில்­லி­யன் ரிங்­கிட் ஏமாற்றிப் பறிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!