மியன்மார் ‘டே பியாவ்’ செய்தி நிறுவனத்தின் தலைமை ஆசிரியருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை

யங்கூன்: கொரோனா கிருமி மரணம் குறித்து தவறான தகவலை வெளியிட்டதாகக் கூறி மியன்மாரின் செய்தி நிறுவன ஆசிரியர் ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மியன்மாரில் 199 பேருக்கு கிருமிப் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஆறு பேர் பலியாகிவிட்டனர். ஆனால் உண்மையான எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் கிழக்கு காரென் மாநிலத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலியாகிவிட்டார் என்று தவறான தகவல் வெளியிட்டதாக ‘டே பியாவ்’ செய்தி நிறுவனத்தின் தலைமை ஆசிரியரான சாவ் யே டெட்டுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பபட்டுள்ளது.