லிபியா தாக்குதலில் 26 பங்ளாதே‌‌ஷ் குடியேறிகள் கொல்லப்பட்டனர்

லிபியா நாட்டின் மிஸ்டா எனும் நகரில் நேற்று நடந்த தாக்குதலில் 30 குடியேறிகள் கொல்லப்பட்டனர். 

அவர்களில் 26 பேர் பங்ளாதே‌‌‌ஷ் நாட்டையும் நால்வர் ஆப்பிரிக்காவையும் சேர்ந்தவர்கள் என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

லிபியாவைச் சேர்ந்த ஆள் கடத்தல்காரரின் குடும்பத்தினர் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர் என்றும் கடத்தல்காரரின் மரணத்திற்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் லிபியா அரசு கூறியுள்ளது. 

தாக்குதலில் மேலும் 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.