போலிஸ்காரர் மீது கொலைக் குற்றச்சாட்டு; அமெரிக்காவில் தொடரும் வன்முறை

வாஷிங்­டன்: அமெ­ரிக்­கா­வில் கறுப்­பின ஆட­வரின் கழுத்­தில் முட்­டி­யால் மிதித்த மினி­ய­போ­லிஸ் போலிஸ்­கா­ரர் மீது கொலை குற்ற­றச்­சாட்­டின் கீழ் கைது செய்­யப்­பட்ட போதி­லும் அங்கு நான்­கா­வது நாளாக வன்­முறை தொடர்ந்தது.

கைது செய்­யப்­பட்ட அந்த போலிஸ்காரர் உட்­பட மேலும் மூவர் பணி­நீக்­கம் செய்­யப்­பட்­ட­னர்.

அமெ­ரிக்­கா­வின் மின­சொட்டா மாநிலத்­தில் உள்ள மினி­ய­போ­லிஸ் என்ற இடத்­தில் கடந்த சில தினங்­க­ளுக்கு முன் ஜார்ஜ் ஃப்ளாயிட் என்ற கறுப்­பின ஆட­வரை மோசடி வழக்­கில் கைது செய்ய முயன்ற போலிஸ்­கா­ரர் ஒரு­வர் அவ­ரது கழுத்­தில் முட்­டி­யால் மிதிக்­கும் காணொளி இணை­யத்­தில் பர­வி­யது.

அவர் பின்­னர் மருத்­து­வ­ம­னை­யில் உயி­ரி­ழந்­த­தைத் தொடர்ந்து கறுப்­பின மக்­க­ளுக்கு எதி­ராக போலி­சார் நிற­வெ­றி­யு­டன் நடந்து கொள்­வ­தா­கக் கூறி மினி­ய­போ­லிஸ் பகு­தி­யில் வன்­முறை வெடித்­தது. அங்­கி­ருந்த காவல் நிலை­யம் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டது. வாக­னங்­களும் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­யின.

இந்­நி­லை­யில் சம்­பந்­தப்­பட்ட போலிஸ்­கா­ர­ரான டெரெக் சாவ்­வி­னின் கைது, மக்­க­ளின் கோபத்­தைத் தணிக்­கும் என அதி­கா­ரி­கள் நம்­பி­னர். ஆனால், நேற்று முன்­தி­னம் இரவு சுமார் 500 பேர் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

மின­சொட்டா மட்­டு­மின்றி சிகாகோ, இல்­லி­னாய், கலி­ஃபோர்­னியா, கென்­டக்சி ஆகிய மாநிலங்

க­ளி­லும் போராட்­டம் தீவி­ர­ம­டைந்து வரு­கிறது.

அட்­லாண்டா நக­ரத்­தில் கூட்­டத்­தைக் கலைக்க போலி­சார் கண்­ணீர்ப்­பு­கைக் குண்­டு­களை வீசி­ய­தாக உள்­ளூர் ஊட­கங்­கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

வெள்ளை மாளி­கைக்கு அருகே ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் கூடி­ய­தை­ய­டுத்து பாது­காப்­புக் கருதி, வெள்ளை மாளிகை முன்பு போலி­சார் குவிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

மேலும், லூயிஸ்­வில் என்ற இடத்­தில் போலி­சா­ரின் துப்­பாக்­கிச் சூட்­டில் உயி­ரி­ழந்த கறுப்­பின பெண் மர­ணத்­திற்கு நீதி கேட்டு அங்­கும் ஆர்ப்­பாட்­டங்கள் நடந்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!