ஹாங்காங் சொத்துகளை விற்கும் அமெரிக்கா

ஹாங்­காங்: ஹாங்­காங்­கில் மிக­வும் பிரத்­தி­யே­க­மான இடத்­தில் இருக்­கும் தனது சொத்­து­களை அமெ­ரிக்கா விற்­ப­தாக வெளி­யு­ற­வுத்­துறை பிர­தி­நிதி ஒரு­வர் வெளியிட்ட மின்னஞ்சல் அறிக்கையில் தெரி­வித்­தார்.

ஹாங்­காங்­கில் தொடர்ந்து நடக்­கும் போராட்­டங்­கள் மற்­றும் தேசிய பாது­காப்பு சட்­டம் தொடர்­பில் சீனா, அமெ­ரிக்கா இடையே நில­வும் பதற்­றம் காரணமாக இம் முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளதாகக் கூறப்படுகிறது. தெற்கு ஹாங்­காங்­கில் இருக்­கும் 10 பில்­லி­யன் ஹாங்­காங் டாலர் மதிப்­பி­லான சொத்தை விற்­கும் அதே வேளை­யில் அமெ­ரிக்க தூத­ரக கட்­ட­டம் உட்­பட ஹாங்­காங்­கில் உள்ள அமெ­ரிக்காவுக்கு சொந்­த­மான மற்ற சொத்­து­களை மேம்­ப­டுத்­து­வ­தில் முத­லீடு செய்­யப்­படும் என்­றார் அவர்.

இதற்­கி­டையே, அதி­க­ரிக்­கும் போராட்­டங்­கள் கார­ணமாக ஹாங்­காங் குடி­யி­ருப்­பா­ளர்­கள் பல­ரும் வேறு நாடு­க­ளுக்குக் குடி­பெ­யர்­வ­தற்­கான ஏற்­பா­டு­க­ளைச் செய்து வரு­வ­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.