செய்திக்கொத்து (உலகம்) 19-6-2020

செய்திக்கொத்து (உலகம்) 19-6-2020

1 mins read
a938d370-00de-4ae8-b3aa-0f98e446317d
இந்தோனீசியாவின் மேடான் நகரில் ரயிலில் பாதுகாப்பு இடைவெளியுடன் பயணம் செய்யும் பயணிகள். படம்: இபிஏ -

இந்தோனீசியாவில் ஒரே நாளில் பதிவான ஆக அதிகத் தொற்று

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் நேற்று புதிதாக 1,331 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானது. இது ஒரே நாளில் பதிவான ஆக அதிக எண்ணிக்கை. இத்துடன் நேற்று 63 பேர் கிருமி பாதிப்பால் உயிரிழந்தனர். தென்கிழக்காசியாவில் ஆக அதிக கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்களைக் கொண்டிருந்த சிங்கப்பூரை இந்தோனீசியா மிஞ்சிவிட்டது.

ஆய்வு: வீட்டுச் சூழலில் கிருமி மேலும் வேகமாகப் பரவும்

பாரிஸ்: வீட்டுச் சூழலில் புதிய கொரோனா கிருமி இரு மடங்கு வேகமாகப் பரவக்கூடிய தன்மையுடையது என்று சீனா, அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தொற்றுநோய்க்கான அறிகுறிகள் இல்லாத நோயாளிகளாலும் கூடுதல் தொற்று பரவக்கூடும் என்று ஆய்வு கூறுகிறது.

ஃபுளோரிடாவில் இரண்டே நாட்களில் 2,500க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

மயாமி: ஒவ்வொரு நாளும் ஃபுளோரிடா நகரில் முன்பை விட கூடுதலான தொற்று பதிவாகி வருகிறது. இரண்டு நாட்களில் 2,500க்கும் மேற்பட்ட புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதியானதில் அந்நகரில் மொத்த எண்ணிக்கை 82,000க்கு மேலாகியுள்ளது.

ஹாங்காங் டிஸ்னிலேண்ட் திறந்தது

ஹாங்காங்: ஐந்து மாதங்களாக மூடியிருந்த ஹாங்காங் டிஸ்னிலேண்ட் பொழுதுபோக்கு பூங்கா, பல பாதுகாப்புக் கட்டுப்பாடுகளிடையே நேற்று அதன் கதவுகளைத் திறந்தது. ஹாங்காங்கில் இதுவரை 1,121 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.