புதிய வகை தொற்றுநோய் பரவும் அபாயம்: சீன ஆய்வாளர்கள்

வாஷிங்­டன்: கொரோனா கிரு­மித்­தொற்­றின் அச்­சு­றுத்­தல் இன்­னும் நீங்­காத நிலை­யில், புதிய வகை கிரு­மி­யால் இன்­னொரு தொற்­று­நோய் பரவ வாய்ப்­புள்­ள­தாக சீன ஆராய்ச்­சி­யா­ளர்­கள் கண்­டு­பி­டித்­துள்­ள­னர்.

அமெ­ரிக்­கா­வின் தேசிய அறி­வி­யல் இத­ழில் இந்த ஆய்­வ­றிக்கை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

பன்­றி­களில் பரவி வரும் இந்த புதிய வகை கிருமி, தொற்று நோயைத் தூண்­டும் ஆற்­ற­லைக் கொண்­டுள்­ளது. இது மர­பணு ரீதி­யாக எச்1என்1 கிரு­மி­யில் இருந்து உரு­வா­கி­யுள்­ளது.

இந்த புதிய வகை கிருமி ஜி4 என அழைக்­கப்­ப­டு­கிறது. ஆராய்ச்­சி­யா­ளர்­கள் சீன இறைச்­சிக் ­கூ­டங்களில் உள்ள பன்­றி­க­ளி­டம் சோதனை மேற்­கொண்­ட­தில், அவை ஜி4 கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்­டது தெரி­ய­வந்­துள்­ளது.

அது­மட்­டு­மின்றி பன்­றி­களில் இருந்து மனி­தர்­க­ளுக்கு இந்த கிருமி பர­வி­யி­ருப்­பதை ஆராய்ச்­சி­யா­ளர்­கள் உறு­தி­ப்ப­டுத்­தி­உள்­ள­னர்.

இறைச்சி கூடங்­களில் இருக்­கும் பன்றிகளைக் கையாளும் தொழி­லா­ளர்­களில் சுமார் 10.4 விழுக்­காட்­டி­ன­ருக்கு ஜி4

கிரு­மித்­தொற்று இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

அதே­ச­ம­யம், ஒரு மனி­த­ரி­டம் இருந்து மற்­றொரு மனி­த­ருக்குப் பர­வு­வ­தற்­கான சாத்­தி­யம் குறித்து இன்­னும் நிரூ­பிக்­கப்­ப­ட­வில்லை.

இருப்­பி­னும் விலங்­கு­க­ளி­டம் அதிக தொடர்­பில் இருப்­ப­வர்­

க­ளைக் கண்­கா­ணிக்க அவ­சர நட­வ­டிக்­கை­கள் தேவை என ஆராய்ச்­சி­யா­ளர்­கள் வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர்.

மக்­கள் நெருக்­க­மாக வசிக்­கும் பகு­தி­களில் உள்­ள­வர்­கள், குறிப்­பாக பன்­றித் தொழி­லில் உள்ள தொழி­லா­ளர்­கள் தீவி­ர­மாக கண்­கா­ணிக்­கப்­ப­ட­வேண்­டும் என்று ஆய்­வா­ளர்­கள் கூறி உள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!