சீனாவை அச்சுறுத்தும் வெள்ள நெருக்கடி

தென்சீனாவின் பல்வேறு பகுதிகள் வெள்ளநீரால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சீனாவின் வடபகுதியிலும் வெள்ளம் ஏற்படும் சாத்தியம் உள்ளது என்று முன்னுரைக்கப் பட்டுள்ளது. சீனாவின் 433 ஆறுகளில் மழை காரணமாக ஜூன் மாதம் முதல் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

சீனாவில் மிகப் பெரிய நன்னீர் ஏரியான ‘போயாங் ஏரி’யில் நேற்று முன்தினம் காலை, நீர் மட்டம் 22.6 மீட்டர் உயரத்தை எட்டியது. படம்: ராய்ட்டர்ஸ்