மருத்துவமனையில் சவுதி மன்னர்

ரியாத்: சவூதி அரேபியாவின் 84 வயது மன்னர் சல்மான் பின் அப்துலசிஸ் நேற்று தலைநகரில் உள்ள மன்னர் ஃபைசால் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உலகின் ஆகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாட்டை நீண்டகாலம் ஆட்சி செய்து வரும் மன்னருக்கு பித்த பையில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாக இன்று வெளியிடப்பட்ட தகவலில் தெரி விக்கப்பட்டது.