பிளாஸ்டிக் தடுப்புகளுக்கு மத்தியில் கற்பிக்கும் ஆசிரியர்கள்

பாலர் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.

கொரோனா கிருமிப் பரவலுக்கு மத்தியில் இந்தோனீசியாவில் பாலர் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். மாணவர்கள் முகக்கவசம், முகக்காப்பு, கையுறை அணிந்து வகுப்புகளுக்குச் செல்கின்றனர். ஆசிரியர்கள் பிளாஸ்டிக் தடுப்புகளுக்குப் பின்னால் இருந்து மாணவர்களுக்குக் கற்பிக்கின்றனர். பள்ளிகளுக்குச் செல்ல விருப்பமில்லாத மாணவர்களை ஆசிரியர்கள் வீட்டிற்கே சென்று சந்திக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்­தோ­னீ­சீ­யா­வில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது.