ஹாங்காங்கில் மருத்துவமனைகள் நிரம்பி வழியக்கூடும்

ஹாங்­காங்: கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் அதி­க­ரித்து வரு­வ­தால் மருத்­து­வ­ம­னை­கள் நோயா­ளி­க­ளால் நிரம்பி வழி­யக்­கூ­டும் என்று எச்­ச­ரித்­துள்­ளார் ஹாங்­காங் தலை­வர் கேரி லாம்.

ஆரம்­ப­க்கட்டத்தில் தொற்று பர­வல் கட்­டுப்­பாட்­டில் வெற்றி கண்ட ஹாங்­காங், கடந்த சில வாரங்­க­ளாக அன்­றா­டம் 100க்கும் மேற்­பட்ட கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­களை எதிர்­கொண்டு வரு­கிறது. நேற்று 106 புதிய சம்­ப­வங்­கள் பதி­வா­கின. அவற்­றில் 98 உள்­ளூர் கிரு­மிப் பர­வல் சம்­ப­வங்­க­ளா­கும்.

ஒரு மாதத்­திற்கு முன்­னர், அன்­றாட வழக்­கு­க­ளின் சரா­சரி எண்­ணிக்கை 10க்கு கீழ் இருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லை­யில் கட்­டாய முகக்­க­வ­சம் மற்­றும் உண­வ­கங்­களில் அமர்ந்து உண­வ­ருந்த தடை மூடு­வது உள்­ளிட்ட புதிய கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் நேற்று நடை­மு­றைக்கு வந்­தன.

கட்­டுப்­பா­டு­களை மீறு­வோ­ருக்கு 5,000 ஹாங்­காங் டாலர் (S$890) அப­ரா­தம் விதிக்­கப்­ப­டக்­கூ­டும்.

இந்­நி­லை­யில் பேசிய கேரி லாம், “கிரு­மித்­தொற்­றின் பெரும் அள­வி­லான சமூக பர­வ­லின் விளிம்­பில் உள்­ளோம். இத­னால் நோயா­ளி­க­ளைக் கையாள்­வ­தில் மருத்­துவ அமைப்பு திண­றக்­கூ­டும். உயி­ரி­ழப்­பு­கள் ஏற்­ப­டக்­கூ­டும், குறிப்­பாக முதி­ய­வர்­க­ளி­டையே,” என்­றார்.

எனவே மக்­கள் சமூக இடை­வெ­ளியை கடை­ப்பி­டிக்க வேண்­டும் என்­றும் முடிந்­த­வரை வீட்­டி­லேயே இருக்­கு­மா­றும் அவர் வலி­யு­றுத்­தி­னார்.

தனி­மைப்­ப­டுத்­தல் பிரி­வு­கள் நிரம்பி வரு­வ­தால், விமான நிலை­யத்­திற்கு அருகே 2,000 தற்­கா­லிக படுக்­கை­கள் கொண்ட மருத்­து­வ­ம­னையை கட்­ட­வுள்­ள­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். இதற்கு உதவ சீன அதி­கா­ரி­கள் முன்­வந்­துள்­ள­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.