விமானப் பயணம் பழைய நிலைக்குத் திரும்ப 2024ஆம் ஆண்டு வரை ஆகும்

சிட்னி: விமா­னப் பய­ணி­கள் போக்­கு­வ­ரத்து பழைய நிலைக்­குத் திரும்­பு­வ­தற்கு 2024ஆம் ஆண்டு வரை பிடிக்­கும் என்று அனைத்­து­லக விமான நிறு­வ­னங்­கள் கணித்­துள்­ளன. இது முன்பு கணிக்­கப்­பட்­ட­தை­விட ஓராண்டு அதி­கம்.

அமெரிக்கா மற்றும் வளரும் நாடுகளில் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் வேகம் குறைவாக உள்ளதாகவும் சில நாடுகளின் பயணக் கட்டுப்பாடுகள், எல்லை மூடல் போன்ற காரணங்களால் விமான போக்குவரத்து மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப நீண்ட காலம் ஆகுமென்று அனைத்துலக விமான போக்குவரத்து சங்கம் தெரிவித்தது