வெளிநாட்டில் சிக்கியவர்கள் மீண்டும் ஜப்பான் செல்ல அனுமதி

தோக்கியோ: ஜப்பானில் உள் ளூர் சுற்றுலாவை ஊக்கப்படுத் தும் திட்டம் அறிவிக்கப்பட்டு ஒரு வாரமாகிவிட்ட நிலையில், அங்கு முதன்முறையாக ஒரே நாளில் ஆயிரம் பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டு

உள்ளது. தோக்கியோவில் பெருமளவில் பரவிய கிருமித்தொற்று, தற்போது மற்ற பகுதிகளிலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது என்றனர் அதிகாரிகள். இதற்கிடையே, ஜப்பானில் தங்குவதற்கான அனுமதி வைத்துள்ள வெளிநாட்டினர் மீண்டும் ஜப்பான் திரும்புவதற்கு இருந்த தடை ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக வெளியறவு அமைச்சு அறிவித்துள்ளது. ஜப்பானில் வசித்து வந்த மாணவர்கள், வணிகர்கள், பயிற்சியாளர்கள் உட்பட சுமார் 90,000 வெளிநாட்டினர் தற் போது ஜப்பானுக்குத் திரும்ப முடியாமல் வேறு நாடுகளில் சிக்கிக் கொண்டுள்ளனர்.

அவ்வாறு நாடு திரும்புபவர்கள், தங்களுக்குத் தொற்று இல்லை என்பதற்கான மருத் துவ சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.