வியட்னாமில் முதல் மரணம்; அத்தியாவசியமற்ற வர்த்தகங்கள் மூடல்

ஹனோய்: வியட்­னா­மில் கிரு­மித்­தொற்­றால் முதல் உயி­ரி­ழப்பு பதி­வா­கி­யுள்­ளது.

அவர் டானாங்­கில் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­ன­தா­கக் கூறப்­படும் 70 வயது முதி­ய­வ­ரா­வார்.

இதற்­கி­டையே நேற்று புதி­தாக கிரு­மித்­தொற்­றுக்கு ஆளான 45 பேரும் டானாங்­கைச் சேர்ந்­த­வர்­கள். இது வியட்­னா­மில் இது­வரை பதி­வான ஆக அதிக எண்­ணிக்­கை­யா­கும்.

அது­போல் ஹோ சி மின் நக­ரத்­தில் இரண்டு கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­கின. இதை

யடுத்து அங்கு இரவு நேர நட­மாட்­டத்­திற்­குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் மது­பா­னக்­கூ­டங்­கள், கண்­காட்­சி­கள், விழாக்­க­ளுக்­குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. 30 பேருக்கு மேல் கூடு­வ­தற்­கும் அனு­மதி கிடை­யாது.

வெளி­நாட்டுப் பய­ணி­க­ளுக்கு மார்ச் மாதம் முதல் வியட்­னாம் தடை விதித்­த­தை­ய­டுத்து, உள்­ளூர் மக்­கள் முகக்­க­வ­சம் அணி­வது, சமூக இடை­வெ­ளி­யைக் கடைப்

பிடிப்­பது போன்­ற­வற்­றில் மெத்­த­ன­மாக இருந்­து­விட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இது­த­விர விமா­னப் பயண கட்­ட­ணங்­கள், விடுதி கட்­ட­ணங்­கள் மலிவு விலை­யில் கிடைத்­த­தால், பலர் உள்­ளூர் சுற்­று­லா­விற்­கும் சென்­ற­னர்.

இந்­நி­லை­யில், டானாங்­கி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட 80,000 சுற்­று­லாப் பய­ணி­களில் எத்­தனை பேருக்­குத் தொற்று இருக்­குமோ என்ற கவ­லை­யும் அங்கு நில­வு­கிறது. அவர்­களில் பெரும்பாலானோர் ஹனோய் அல்­லது ஹோ சி மின் நக­ரத்­தைச் சேர்ந்­த­வர்­க­ளா­வர்.