அமெரிக்காவில் கிருமிப் பரவலைத் தடுக்க மீண்டும் அதிரடி நடவடிக்கை

நியூயார்க்: அமெ­ரிக்­கா­வில் வீடு­களில் நடக்­கும் ஒன்­று­கூ­டல் நிகழ்ச்சி, வார இறு­திக் கொண்­டாட்ட நிகழ்ச்­சி­க­ளால் கொரோனா தொற்­றுக்கு ஆளா­வோர் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது.

இத­னால் அந்­நாட்­டின் நியூ­யார்க் உள்­ளிட்ட பல மாநி­லங்­களில் ஒன்று­கூ­டல் போன்ற நிகழ்ச்­சி­களில் கலந்­து­கொள்­வோர் எண்­ணிக்கை குறைக்­கப்­பட்­டுள்­ளது. அது­போன்ற நிகழ்­வு­களில் கலந்­து­கொள்­வோர் பாது­காப்பு இடை­வெ­ளியை கண்­டிப்­பா­கக் கடைப்­பி­டிக்க வேண்­டும்.

இல்­லை­யெ­னில் மீண்­டும் நோய்த்­தொற்று அதி­க­ள­வில் பர­வக்­கூ­டும் என்று அந்­தந்த மாநில நிர்­வா­கங்­கள் மக்­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளன.

நியூ­ஜெர்­சியில் கிரு­மித்­தொற்று மீண்­டும் பர­வா­மல் இருக்­கும் வகை­யில் அங்கு பாது­காப்பு இடை­வெ­ளிக் கட்­டுப்­பாடு மேலும் கடு­மை­யாக்­கப்­ப­டு­கிறது.

அதே­போல் நியூ­ஜெர்சியில் ஒன்று கூடல் நிகழ்ச்­சி­க­ளுக்­குக் கட்­டுப்­பாடு விதிக்­கப்­பட்­டுள்­ளது. வீடு­களில் நடக்­கும் நிகழ்­வு­களில் 25 பேர் மட்­டுமே கலந்­து­கொள்ள முடி­யும் என அம்­மா­நில ஆளு­நர் பிலிப்ஸ் மர்ஃபி உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளார்.

அமெ­ரிக்­கா­வில் நான்கு வார கால­மாக கொவிட்-19 நோய்த்­தொற்­றுக்­குப் பலி­யா­வோர் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கிறது.

இந்­நி­லை­யில் புதிய தொற்­றுச் சம்­ப­வங்­கள் கடந்த இரண்டு வாரங்­க­ளாக குறைந்து வரு­வ­தாக ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னத்­தின் ஆய்­வ­றிக்கை தெரி­வித்­துள்­ளது. கடந்த வாரம் நோய்த்­தொற்­றால் மாண்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை அதற்கு முந்­தைய வாரத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் 36 விழுக்­காடு அதி­கம்.

ஆனால் புதிய தொற்­றுச்­சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை கடந்த வாரம் 5 விழுக்­காடு குறைந்­துள்­ளது. முந்­தைய வாரத்­தில் 435,000 புதிய தொற்­றுச்­சம்­ப­வங்­கள் கண்­ட­றி­யப்­பட்­டன.

கடந்த வாரம் கலி­போர்­னியா, ஃபுளோ­ரிடா, டெக்­சஸ் ஆகிய மாநி­லங்­களில் கண்­ட­றி­யப்­பட்ட புதிய நோய்த்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் 180,000. இருப்­பி­னும் இந்த எண்­ணிக்கை அதற்கு முந்­தைய வாரத்­து­டன் ஒப்­பி­டும்­போது குறைவே என்று கூறப்­ப­டு­கிறது. ஓக்­லா­ஹோமா, மொன்­டனா, மிசோரி ஆகிய மாநி­லங்­களில் புதிய நோய்த்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் தொடர்ந்து ஏறு­மு­க­மாக இருந்து வரு­கின்றன.

தேசிய அள­வில் மேற்­கொள்­ளப்­படும் கொவிட்-19 சோத­னை­களில் 8.2 விழுக்­காட்டு பேர் நோய்த்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக ஆய்வு கூறு­கிறது.

பள்ளிகளைத் திறக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு

அமெ­ரிக்­கா­வின் பல மாநி­லங்­களில் கொவிட்-19 தொற்று மக்­க­ளுக்­குப் பெரிய அச்­சு­றுத்­த­லாக இருந்து வரும் இவ்­வே­ளை­யில் 35 மாநி­லங்­களில் மீண்­டும் பள்­ளி­க­ளைத் திறக்­கும் அர­சாங்­கத்­தின் திட்­டத்­திற்கு பள்ளி ஆசி­ரி­யர்­கள் எதிர்ப்­பு தெரி­வித்­துள்­ள­னர். நாடு முழு­தும் ஆசி­ரி­யர்­களும் கல்­வித்­துறை ஊழி­யர்­களும் கிரு­மித்­தொற்றை ஒழிக்­கும் வரை பள்­ளி­க­ளைத் திறக்­கக்­கூ­டாது என்று வலி­யு­றுத்தி போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

ஆய்­வுப்­பூர்­வ­மாக வெளி­யி­டப்­படும் தர­வு­க­ளின் அடிப்­ப­டை­யில்­தான் பள்­ளி­கள் மீண்­டும் திறக்­கப்­பட வேண்­டும் என்று கூறி, இந்­தத் திட்­டத்தை எதிர்க்­கும் வகை­யி­லான பதா­கை­களை ஏந்­தி­ய­வாறு பாது­காப்பு இடை­வெ­ளி­யு­டன் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!