சுடச் சுடச் செய்திகள்

சினபாங் எரிமலை வெடிப்பு- விமானங்களுக்கு எச்சரிக்கை

இந்தோனீசியாவின் வடக்கு சுமத்திரா மாநிலத்தில் சினபாங் எரிமலை இன்று வெடித்ததைத் தொடர்ந்து விமானங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டின் தேசிய எரிமலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது

காரோ மாவட்டத்திலுள்ள 2, 475 மீட்டர் உயரமான  எரிமலை, இரண்டு மீட்டர் உயரமான சாம்பல் புகையைக் கக்கியதாக இந்தோனீசிய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. 

வெப்பமான மேகமூட்டம் உள்ள இடங்களில் விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ளன. அத்துடன் விமானங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனீசியாவில் எந்நேரமும் வெடிக்கக்கூடிய 129 எரிமலைகளில் சினபாங் எரிமலையும் ஒன்று. 2014ஆம் ஆண்டில் அது கடைசியாக வெடித்தபோது 16 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேற வேண்டியிருந்தது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon