ஆஸ்திரேலிய பிரதமர்: உள்நாட்டு எல்லைகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவு

சிட்னி: கிறிஸ்­து­மஸ் பண்­டி­கைக்கு முன் உள்­நாட்டு எல்­லை­கள் திறக்­கப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்பு குறை­வாக உள்­ளது என்று கூறி­யுள்­ளார் ஆஸ்­தி­ரே­லிய பிர­த­மர் ஸ்காட் மோரி­சன்.

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் நேற்று ஆக அதிக அள­வாக 19 பேர் தொற்­றுக்­குப் பலி­யா­கி­னர். இவர்­கள் அனை­வ­ரும் விக்­டோ­ரியா மாநி­லத்­தைச் சேர்ந்­த­வர்­கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

ஆனால் கடும் கட்­டுப்­பா­டு­க­ளால் விக்­டோ­ரி­யா­வில் பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை குறை­யத் தொடங்­கி­யுள்­ளது. அங்கு நேற்று 322 பேர் தொற்­றுக்கு ஆளா­கி­னர். ஐந்து நாட்­க­ளுக்­குப் பிறகு ஆக குறை­வான எண்­ணிக்­கை­யா­கும் இது.

இந்­நி­லை­யில், கிரு­மிப் பர­வல் நெருக்­க­டியை கட்­டுக்­குள் கொண்டு வர ஆஸ்­தி­ரே­லி­யா­வின் எட்டு மாநி­லங்­கள், தங்­க­ளு­டைய எல்­லை­களை மூடி­யுள்­ளன.

இதற்­கி­டையே, பேசிய ஆஸ்­தி­ரே­லிய பிர­த­மர் ஸ்காட் மோரி­சன், “கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுக்­குள் கொண்டு வரு­வ­தன் தொடர்­பில் கடந்த வாரம் எனக்கு இருந்த நம்­பிக்­கை­யை­விட இன்று அதிக நம்­பிக்­கை­யு­டன் இருக்­கி­றேன்,” என்­றார்.

மேலும் மாநில எல்­லை­கள் மூடப்­பட்­டுள்­ள­தால், ஆங்­காங்கே சிக்­கித் தவிக்­கும் குடி­யி­ருப்­பா­ளர்­கள் தங்­கள் சொந்த ஊருக்­குத் திரும்ப அனு­ம­திக்க மாநில அர­சு­கள் ஒத்­து­ழைக்க வேண்­டும் என்­றும் அவர் கேட்­டுக்கொண்­டார்.

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் 21,400 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர், 314 பேர் மாண்­டு­விட்­ட­னர். இவற்­றில் மூன்­றில் இரண்டு பங்கு விக்­டோ­ரி­யா­வில் நிகழ்ந்­தவை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!