கடலில் விழுந்த ராட்சத பனிப்பாறை

ஆர்க்­டிக் பெருங்­க­டல் பகு­தி­யில் மிகப்­பெ­ரிய பனித்­துண்டு ஒன்று உடைந்து விழுந்­த­தா­க­வும் அதன் அளவு பாரிஸ் நக­ரத்­தைக் காட்­டி­லும் பெரி­ய­தாக இருக்­கக்­கூ­டும் என்­றும் விஞ்­ஞா­னி­கள் தெரி­வித்து உள்­ள­னர்.

வட­கி­ழக்கு கிரீன்­லாந்­தில் உடைந்து விழுந்த அந்த பனிப்­பா­றைத் துண்டு சுமார் 113 சதுர கிலோ மீட்­டர் அள­வு­கொண்­ட­தாக இருக்­க­லாம் என்று குறிப்­பிட்­டுள்ள அவர்­கள், உடைந்த பனி பாகங்­கள் கட­லில் மிதந்து மூழ்­கு­வ­தைக் காட்­டும் செயற்­கைக்­கோள் படங்­களை வெளி ­யிட்டுள்­ள­னர்.

வெப்­ப­நிலை அதி­க­ரிப்­பால் பனிப்­பாறை கொஞ்­சம் கொஞ்­ச­மாக உருகி கடை­சி­யில் துண்­டாகி விழுந்­தி­ருக்­க­லாம் என ஜிஇ­யு­எஸ் எனப்­படும் டென்­மார்க், கிரீன்­லாந்து புவி­யி­யல் ஆய்­வில் குறிப்­பி­டப்­பட்டு உள்­ளது.

1999ஆம் ஆண்டு முதல் 160 சதுர கிலோ மீட்­டர் அள­வி­லான துண்­டு­களை பனிப்­பாறை இழந்­துள்­ளது என­வும் அந்த ஆய்வு தெரி­விக்­கிறது. ஆர்க்­டிக் பெருங்­க­ட­லில் அள­வுக்­க­தி­க­மான வெப்­ப­மாற்­றம் நிகழ்ந்­தி­ருப்­ப­தையே பனிப்­பாறை துண்­டான சம்­ப­வம் உணர்த்­து­வ­தாக விஞ்­ஞா­னி­கள் அந்த ஆய்­வில் கூறி­யுள்­ள­னர்.

கிரீன்­லாந்­தில் உரு­கும் பனி­கட்­டி­க­ளால் 2100ஆம் ஆண்­டு­வாக்­கில் கடல் நீர்­மட்­டம் 10 சென்டி மீட்­டர் முதல் 12 சென்டி மீட்­டர் வரை உய­ரக்­கூ­டும் என்று அண்­மை­யில் வெளி­யான லிங்­கன் பல்­க­லைக்­க­ழக ஆய்வு ஒன்று குறிப்­பிட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!