இந்தோனீசியா: கடலுணவில் கொரோனா கிருமி

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வில் நேற்று புதி­தாக 3,989 பேருக்­குக் கொரோனா கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. இவர்­க­ளை­யும் சேர்த்து பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 244,676க்கு அதி­க­ரித்­துள்­ள­தாக இந்­தோ­னீ­சிய சுகா­தார அமைச்சு தெரி­வித்து உள்­ளது. மேலும் புதி­தாக 105 மர­ணங்­களும் அங்கு பதி­வாகி உள்­ளன. மொத்­த­மாக 9,553 பேர் அங்கு மர­ண­ம­டைந்துவிட்­ட­னர். தென்­

கி­ழக்­கா­சி­யா­வில் ஆக அதிக கொரோனா மர­ணம் இந்­தோ­னீ­சி­யா­வில்­தான் நிகழ்ந்­துள்­ளது.

முன்­ன­தாக, அன்­றா­டம் பதி­வா­கும் கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­களில் நேற்று முன்­தி­னம் ஆக அதி­க­மாக 4,168 சம்­ப­வங்­கள் பதி­வா­யின. அத்­து­டன், அன்று 112 பேர் மாண்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டது.

நாட­ளா­விய புதிய கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் அங்கு படிப்­ப­டி­யாக அதி­க­ரித்து வரு­கின்­றன.

அத­னைக் கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கில் தலை­ந­கர் ஜகார்த்­தா­வில் கடந்த வாரம் திங்­கள் (செப்­டம்­பர் 14) முதல் இரண்­டா­வது பகுதி முடக்­க­நிலை நடப்­பில் இருந்து வரு­கிறது.

அதன்­படி, வர்த்­தக நிறு­வ­னங்­கள், கடை­கள், கடைத்­தொ­கு­தி­கள், வழி­பாட்­டுத்­த­லங்­கள் ஆகியன குறைந்த அளவு ஆட்­க­ளோடு இயங்கி வரு­கின்­றன. உண­வ­கங்­க­ளி­லும் பானக் கடை­க­ளி­லும் உட்­கார்ந்து உண்­ண­வும் அருந்­த­வும் தடை விதிக்­கப்­பட்டு உள்­ளது.

இதற்­கி­டையே, பி.டி. புத்ரி இன்டா என்­னும் கட­லு­ணவு நிறு­வ­னத்­துக்கு ஏற்­று­ம­தித் தடையை இந்­தோ­னீ­சிய அர­சாங்­கம் விதித்­துள்­ளது. பதப்­ப­டுத்­தப்­பட்ட மீன் தயா­ரிப்­புப் பொட்­ட­லம் ஒன்­றில் கொரோனா கிருமி கண்­ட­றியப்­பட்­ட­தைத் தொடர்ந்து சீனா­வுக்­கான ஏற்­று­மதி நிறுத்தி வைக்­கப்­பட்டு உள்­ள­தாக இந்­தோ­னீ­சிய மீன்­வள அமைச்சு நேற்று முன்

­தி­னம் தெரி­வித்­தது. கிருமி தொற்­றி­யது எவ்­வாறு என்று விசா­ரணை நடத்­தப்­பட்டு வரு­வ­தா­க­வும் மற்ற கட­லு­ணவு ஏற்­று­மதி நிறு­வ­னங்­க­ளுக்­குத் தடை இல்லை என்­றும் அமைச்சு குறிப்­பிட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!