விடுபட்ட 16,000 தொற்று சம்பவங்கள்; ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படும் அபாயம்

லண்­டன்: தொழில்­நுட்­பக் கோளாறு கார­ண­மாக இங்­கி­லாந்­தில் 16,000 கொவிட்-19 சம்­ப­வங்­கள் கணக்­கில் கொள்­ளப்­ப­ட­வில்லை என்ற தக­வலை பிரிட்­டிஷ் சுகா­தா­ரத்­துறை செய­லா­ளர் மாட் ஹான்­கோக் கூறி­யுள்­ளார்.

மைக்­ரோ­சாஃப்ட் எக்­செல் மென்­பொ­ருள் அனு­ம­திக்­கும் அள­வை­விட அதிக அள­வில் இருந்த கோப்­பில் தர­வு­கள் இருந்­த­தால் 16,000 தர­வு­கள் விட்­டுப்­போ­ன­தா­கக் கூறப்­பட்­டது.

இத்­த­கைய தவறு நேர்ந்­தி­ருக்­கக்­கூ­டாது என்று திரு ஹான்­கோக் மக்­க­ள­வை­யில் நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தார்.

செப்­டம்­பர் 25 முதல் அக்­டோ­பர் 2ஆம் தேதிக்கு உட்­பட்ட கால­கட்­டத்­தில் 15,841 கொவிட்-19 தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கின. ஆனால், அவை நாட்­டின் மொத்த தொற்று எண்­ணிக்­கை­யில் இந்த எண்­ணிக்கை பிர­தி­ப­லிக்­கப்­ப­ட­வில்லை. மேலும், அவர்­க­ளுக்கு தொற்று ஏற்­பட்­ட­தன் தொடர்­பி­லான தடங்­களும் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை. அவர்­க­ளு­டன் நெருக்­க­மாக இருந்­த­வர்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள அறி­வு­றுத்­தப்படவும் இல்லை.

ஆய்­வ­கங்­களில் இருந்து இங்­கி­லாந்­தின் பொதுச் சுகா­தார அமைப்­புக்கு தானி­யக்க முறை­யில் கோப்­பு­கள் மாற்­றம் செய்­யும்­போது தவறு நேர்ந்­தி­ருப்­ப­தா­கக் கூறப்­பட்­டது. கடந்த சனிக்­கி­ழமை இந்­தப் பிரச்­சினை கண்­டு­பி­டிக்­கப்­பட்டு சரி செய்­யப்­பட்­ட­தா­க­வும் இதன் தொடர்­பி­லான விசா­ரணை தொடர்­வ­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

கொரோனா தொற்று கண்­ட­வர்­க­ளு­டன் தொடர்­பில் இருந்­ததே தெரி­யா­மல் ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் இருந்­தி­ருப்­பர் என்று இந்­தச் சம்­ப­வத்­துக்கு தொழி­லா­ளர் கட்சி ஆட்­சே­பம் தெரி­வித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!