டிரம்ப்பைச் சாடிய கமலா ஹாரிஸ்; பதிலுக்கு 'அரக்கி' என்று குறிப்பிட்ட டிரம்ப்

டிரம்ப்பைச் சாடிய கமலா ஹாரிஸ்; பதிலுக்கு 'அரக்கி' என்று குறிப்பிட்ட டிரம்ப்

2 mins read
0af61a31-d8d2-474f-9684-80429dda2213
திருவாட்டி கமலா ஹாரிசை அதிபர் டிரம்ப் 'அரக்கி' என்று நேற்று சாடினார். ஃபாக்ஸ் பிசினஸ் நியூசுக்கு நேற்று அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு இரு முறை குறிப்பிட்டார். படம்: ஏஎஃப்பி -

வரும் நவம்­பர் மாதம் 3ஆம் தேதி­யன்று அமெ­ரிக்க அதி­பர் தேர்­தல் நடை­பெற இருக்­கிறது.

அதி­பர் வேட்­பா­ளர்­க­ளான அதி­பர் டோனல்ட் டிரம்ப்­பும் அவரை எதிர்த்­துப் போட்­டி­யி­டும் ஜன­நா­யக கட்­சி­யின் ஜோ பைட­னும் அண்­மை­யில் தேர்­தல் விவா­தத்­தில் ஈடு­பட்­ட­னர். அது வாக்­கு­வா­தத்­தில் முடிந்­தது.

இந்­நி­லை­யில், துணை அதி­பர் வேட்­பா­ளர்­க­ளான குடி­ய­ர­சுக் கட்­சி­யின் மைக் பென்­சும் ஜன­நா­ய­கக் கட்­சி­யின் கமலா ஹாரி­சும் நேற்று முன்­தி­னம் விவா­தித்­த­னர்.

இதில் கொரோனா கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ராக அதி­பர் டிரம்ப் நடை­மு­றைப்­ப­டுத்­தி­யுள்ள திட்­டங்­களை திரு­வாட்டி கமலா கடு­மை­யாக விமர்­சித்­தார்.

அதி­பர் டிரம்ப் எடுத்த நட­வ­டிக்­கை­கள் அனைத்­தும் தோல்­வி­யில் முடிந்­தி­ருப்­ப­தாக அவர் சாடி­னார்.

"இதற்கு முன் எந்த ஓர் அமெ­ரிக்க அதி­ப­ரின் திட்­ட­மும் இவ்வளவு மோச­மான தோல்­வி­யைச் சந்­தித்­த­தில்லை. இத்­த­கைய அனுபவத்தை அமெ­ரிக்­கர்­கள் சந்­தித்­த­தில்லை," என்று சால்ட் லேக் நக­ரில் உள்ள யூட்டா பல்­க­லைக்­க­ழ­கத்­தில் நடை­பெற்ற விவா­தத்­தில் திரு­வாட்டி கமலா தெரி­வித்­தார்.

இதற்­குப் பதி­ல­ளித்த திரு மைக் பென்ஸ், கொரோனா கிரு­மித்­தொற்­றுக்கு சீனா­தான் கார­ணம் என்று குறை­கூ­றி­னார். கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான அதி­பர் டிரம்ப் எடுத்த நட­வ­டிக்­கை­களை அவர் பாராட்­டி­னார். கடந்த ஜன­வரி மாதத்­தி­லி­ருந்து கிரு­மித்­தொற்று தொடங்­கிய நாடான சீனா­வில் இருப்­போ­ருக்கு அதி­பர் டிரம்ப் அமெ­ரிக்­கா­வுக்கு வர தடை விதித்­ததை அவர் உதா­ர­ணம் காட்­டி­னார்.

"அமெ­ரிக்­கர்­க­ளின் உடல் நலத்­துக்கு அதி­பர் டிரம்ப் முன்­னு­ரிமை கொடுத்­தி­ருக்­கி­றார் என்­பதை அமெ­ரிக்­கர்­கள் புரிந்­து­கொள்ள வேண்­டும்," என்று திரு மைக் பென்ஸ் தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே, கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்ள அதி­பர் டிரம்ப், முழு­மை­யாக குண­ம­டை­யா­வி­டில் அடுத்த தேர்­தல் விவா­தத்தை ரத்து செய்ய வேண்­டும் என்று திரு ஜோ பைடன் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

இந்நிலையில், திருவாட்டி கமலா ஹாரிசை அதிபர் டிரம்ப் 'அரக்கி' என்று நேற்று சாடினார். ஃபாக்ஸ் பிசினஸ் நியூசுக்கு நேற்று அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு இரு முறை குறிப்பிட்டார்.