அன்வாரிடம் இன்னொரு நாளில் விசாரணை நடத்தப்படும்: போலிஸ்

எதிர்க்­கட்­சித் தலை­வர் அன்­வார் இப்­ரா­ஹிம் மலே­சியா­வின் அடுத்த பிர­த­ம­ராவதற்கு ஆதரவு அளிக்­க­ இ­ருப்­ப­வர்­கள் என சமூக ஊட­கங்­களில் வெளி­யான 121 எம்.பி.க்கள் பட்­டி­ய­லில் தங்­க­ளின் பெய­ரும் இடம்­பெற்று இ­ருந்­ததை அடுத்து எம்.பி.க்கள் தரப்­பிலிருந்து போலி­சி­டம் ஆறு புகார்­கள் அளிக்­கப்­பட்டுள்ளன.

இதை­ய­டுத்து, நேற்­றுக் காலை 11 மணி­ய­ள­வில் அன்­வா­ரி­டம் விசா­ரணை நடத்த போலிஸ் திட்­ட­மிட்டு இருந்­தது. ஆனால், பின்­னர் அவ்­வி­சா­ரணை இன்­னொரு நாளுக்­குத் தள்­ளி­வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

“நாளை (இன்று) காலை 9 மணிக்­குத்­தான் திரு அன்­வா­ரால் வர முடி­யும் என்று அவ­ரு­டைய தனிச் செய­லா­ளர் தெரி­வித்­து­விட்­டார். ஆகை­யால், இன்­னொரு நாளில் அவ­ரது வாக்கு­மூ­லம் பதிவு­செய்­யப்­படும். அது எப்­போது என்று பின்­னர் அறி­விக்­கப்­படும்,” என்று குற்­றப் புல­னாய்­வுத் துறை­யின் இயக்­கு­நர் ஹுசிர் கூறினார்.

முன்­ன­தாக, பங்­குச் சந்­தைப் பட்­டி­ய­லில் இடம்­பெற்­றுள்ள சில நிறு­வ­னங்­க­ளுக்­கும் தமக்­கும் தொடர்பு இருப்­ப­தாக வெளி­யான தக­வ­லில் துளி­யும் உண்­மை­யில்லை என்று 73 வய­தான திரு அன்­வார் மறுத்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், திரு அன்­வார் இன்று மாமன்­ன­ரைச் சந்­திக்­க­­ இருப்­ப­தால் அர­சி­யல் வட்­டா­ரங்­கள் பர­ப­ரப்­ப­டைந்­துள்­ளன. அடுத்த பிர­த­ம­ரா­கத் தமக்­குப் போதிய எம்.பி.க்க­ளின் ஆத­ரவு இருப்­ப­தா­க­வும் மாமன்­ன­ரைச் சந்­திக்­கும்­போது ஆத­ரவு எம்.பி.க்க­ளின் பட்­டி­யலை ஒப்­ப­டைப்­பேன் என்­றும் பின்­னர் அதைப் பொது­வெ­ளி­யில் வெளி­யி­டு­வேன் என்­றும் திரு அன்­வார் கடந்த வாரம் கூறி­யி­ருந்­தார்.

கடந்த முறை நாடா­ளு­மன்­றத்­தில் நடந்த நம்­பிக்கை வாக்­கெடுப்­பின்­போது, மொத்­தம் 222 எம்.பி.க்களில் 113 பேர் பிர­த­மர் முகை­தீன் யாசி­னுக்கு ஆத­ர­வாக வாக்­களித்­த­னர்.

இத­னி­டையே, எம்.பி.க்கள் பட்­டி­யல் தொடர்­பில் மக்­கள் பீதி அடைய வேண்­டாம் என்று திரு ஹுசிர் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!