‘அமெரிக்க அதிபர் தேர்தலில் மோசடியில்லை’

அமெ­ரிக்க அதி­பர் தேர்­த­லில் மோசடி நடந்­த­தற்­கான ஆதா­ர­மில்லை என்று குடி­ய­ர­சுக் கட்சி, ஜன­நா­ய­கக் கட்சி ஆகிய இரண்டு கட்­சி­க­ளை­யும் சேர்ந்த தேர்­தல் அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

அதி­பர் தேர்­த­லில் ஜன­நா­ய­கக் கட்­சி­யைச் சேர்ந்த வேட்­பா­ளர் ஜோ பைட­னும் அவ­ரு­டன் துணை அதி­பர் பத­விக்­குப் போட்­டி­யிட்ட கமலா ஹாரி­சும் 290 தேர்வு சபை வாக்கு­ க­ளு­டன் அசைக்க முடி­யாத நிலை­யில் வெற்றி பெற்­றுள்­ள­னர்.

ஆனால் தோல்­வியை ஒப்­புக் கொள்­ளாத அதி­பர் டோனல்ட் டிரம்ப், தேர்­த­லில் முறை­கே­டு­கள் நடந்­துள்­ள­தா­கக் கூறி சட்ட நட­வ­டிக்­கை­களை எடுத்­து வருகிறார்.

இந்த நிலை­யில் நாடு முழு­வ­தும் உள்ள தேர்­தல் அதி­கா­ரி­கள், கொவிட்-19 கிரு­மி பர­வும் அபா­ய­க­ர­மான சூழ்­நி­லை­யி­லும் வாக்­கா­ளர்­கள் திரண்டு வந்து வாக்­க­ளித்து ஜன­நா­யக நடை­மு­றை­கள் வெற்­றி­க­ர­மாக நிறைவேற்றப்பட்டு உள்ளன என்று குறிப்­பிட்­ட­னர்.

“தேர்­த­லைப் பற்றி உண்­மை­யில்­லா­த­வற்­றை­யும் கற்­பனை செய்து பார்க்­கக்­கூ­டி­யது மனித சுபா­வம், தேர்­தல் என்­றாலே ஏதோ ஒரு கார­ணத்­துக்­காக ஊகங்­களும் வதந்­தி­களும் பர­வு­கின்­றன,” என்று ஒஹையோ மாநில தேர்­தல் அதி­கா­ரி­யான குடி­ய­ர­சுக் கட்­சி­யின் ஃபிராங்க் லாரோஸ் தெரி­வித்­தார்.

ஜன­நா­ய­கக் கட்­சி­யைச் சேர்ந்த மின்­ன­சோட்­டா­வின் தேர்­தல் அதி­கா­ரி­யான ஸ்டீவ் சைமன், “தேர்­தல் மோசடி எது­வும் இல்லை என்று கூறி­னார்.

கன்­சாஸ் மாநி­லத்­தி­லும் வாக்கு அளிப்­ப­தி­லும் வாக்­குப் பதி­வி­லும் பிரச்­சி­னை­கள் இருந்­த­தா­கத் தெரி­ய­வில்லை என்று அம்­மா­நில பேச்­சா­ளர் ஒரு­வர் சொன்னார்.

இதற்­கி­டையே நவம்­பர் 3ஆம் தேதி நடை­பெற்ற தேர்­த­லில் ஜோ பைடன்­தான் வெற்றி பெற்­றார் என்று குடி­ய­ர­சுக் கட்­சி­யி­னர் உட்­பட 80 விழுக்­காடு அெமரிக்­கர்­கள் நம்புகின்றனர்.

ராய்ட்­டர்ஸ் மற்­றும் இப்­சோஸ் மேற்­கொண்ட ஆய்­வில் இது தெரிய வந்­துள்­ளது.

அதி­பர் தேர்­த­லில் வெற்றி பெறு­வ­தற்கு 270 தேர்வு சபை வாக்­கு­கள் தேவை. தேர்­த­லில் ஜோ பைடன் 290 தேர்வு சபை வாக்­கு ­க­ளைப் பெற்­றுள்­ளார். அதி­பர் டோனல்ட் டிரம்­புக்கு 214 வாக்­கு­களே கிடைத்­துள்­ளன.

மேலும் ஜோ பைட­னுக்கு 76.3 மில்­லி­யன் அதா­வது 50.7 விழுக்­காடு வாக்­கு­க­ள் கிடைத்துள்ளன. டிரம்ப்­ 71.6 மில்­லி­யன் அதா­வது 47.6 விழுக்­காடு வாக்­கு­க­ளைப் பெற்­றார்.

ராய்ட்டர்ஸ், இப்சோசின் ஆய்வு சனிக்கிழமை தொடங்கி செவ் வாய்க்கிழமை வரை நடைபெற்றது.

இதில் பங்கேற்றவர்களில் 79 விழுக்காட்டினர் பைடனே வெற்றி பெற்றதாக நம்புகின்றனர்.

மூன்று விழுக்காட்டினர் டிரம்ப் வெற்றி பெற்றதாகவும் ஐந்து விழுக்காட்டினார் யார் வெற்றி பெற்றார்கள் என்பது தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர்.

இதற்கிடையே தேர்தல் முடிவு களுக்கு எதிராக அதிபர் டிரம்ப் சட்ட நடவடிக்கைகளை எடுத்தாலும் அதிகார மாற்றத்தை தடுத்து நிறுத்த முடியாது என்று புதிய அதிபராக பொறுப்பு ஏற்கவிருக்கும் ஜோ பைடன் கூறினார்.

டெலவரில் பேசிய திரு பைடன் தானும் தமது குழுவினரும் ஜனவரி 20ஆம் தேதி பொறுப்பு ஏற்பதற்கு முன்பு புதிய நிர்வாகத்தை அமைத்து வருவதாகத் தெரிவித்தார்.

டிரம்ப் தோல்வியை ஒப்புக் கொள்ளாதது தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது என்றும் அவர் சொன்னார். தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதன்முதலாக செய்தி யாளர்களுக்கு திரு பைடன் பேட்டி யளித்தார். அப்போது, இந்தப் பேட்டியை டிரம்ப் பார்த்து கொண்டி ருந்தால் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த பைடன், “அதிபர் அவர்களே, உங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக் கிறேன்,” என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!