மேலும் 100 மில்லியன் தடுப்பூசி மருந்துகளை வாங்குகிறது இந்தோனீசியா

மேலும் 100 மில்லியன் தடுப்பூசி மருந்துகளை வாங்குகிறது இந்தோனீசியா

1 mins read
982b9bff-7f02-4667-a646-f2a8fab0db28
படம்: ராய்ட்டர்ஸ் -

அஸ்ட்­ரா­ஸெ­னிகா மற்­றும் ஃபைசர் நிறு­வ­னங்­க­ளி­டம் இருந்து இந்­தோ­னீ­சியா 100 மில்­லி­யன் தடுப்பு ஊசி மருந்­து­களை வாங்­கு­வ­தற்கு ஒப்­பு­தல் தெரி­வித்­துள்­ளது.

ஜன­வரி முதல் வாரத்­தில் அதற்­கான ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­தி­டப்­படும் என்று கூறப்­ப­டு­கிறது. தடுப்பு மருந்­து­கள் அடுத்த ஆண்­டின் இரண்­டா­வது காலாண்­டில் இருந்து படிப்­ப­டி­யா­கத் தரு­விக்­கப்­படும் என்று அந்­நாட்­டின் சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

முன்­ன­தாக இந்­தோ­னீ­சியா, சீனா­வின் பயோ­ஃபார்­ம­சி­டிக்­கல் நிறு­வ­னத்­தி­டம் இருந்து 125 மில்­லி­யன் சினோ­வக் தடுப்பு ஊசி மருந்­து­க­ளை­யும், அமெ­ரிக்­கா­வின் நோவா­வேக்ஸ் நிறு­வ­னத்­தி­டம் இருந்து 50 மில்­லி­யன் மருந்­து­க­ளை­யும் வாங்­கு­வ­தற்கு ஒப்­பந்­தம் செய்­தி­ருந்­தது.

அதன்­படி முதல்­கட்­ட­மாக டிசம்­பர் 6ஆம் தேதி 1.2 மில்­லி­யன் சினோ­வக் மருந்­து­கள் ஜகார்த்தா வந்து சேர்ந்­தது. மேலும் 1.8 மில்­லி­யன் மருந்­து­கள் ஜன­வரி மாதத்­திற்­குள் கிடைத்­து­வி­டும். நோவா­வேக் மருந்து 2021 ஜூன் மாதத்­தில் கிடைக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அங்கு இது­வ­ரை­யி­லும் 21,000 பேர் கொரோ­னா­வுக்­குப் பலி­யா­கி­விட்­ட­னர். 727,000 பேர் நோய்த்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.