சீனாவில் குழந்தை பிறப்பு 30% வீழ்ச்சி

குழந்தை பெற்­றுக்­கொள்­வ­தன் தொடர்­பில் விதிக்­கப்­பட்டு இருந்த கட்­டுப்­பா­ட்டை சீனா தளர்த்­தி­ய­போ­தி­லும் அதற்­கான பலன் அந்­நாட்­டுக்­குக் கிட்­ட­வில்லை.

கடந்த ஆண்டு முழு­மைக்­கும் பதி­வான குழந்தை பிறப்பு விகி­தம் அதற்கு முந்­திய ஆண்­டைக் காட்­டி­லும் மூன்­றில் ஒரு பங்கு குறைவு.

2019ஆம் ஆண்டு முழு­மைக்­கும் 14.65 மில்­லி­யன் குழந்­தை­கள் பிறந்­த­தா­கப் பதிவு செய்­யப்­பட்ட நிலை­யில் கடந்த ஆண்டு அந்த எண்­ணிக்கை 10.04 மில்­லி­யன் ஆனது. இது கிட்­டத்­தட்ட 30 விழுக்­காடு குறைவு.

மேலும், தொடர்ச்­சி­யாக நான்­கா­வது ஆண்­டாக பிறப்பு விகி­தம் குைறந்து வந்­துள்­ளது.

சீனா­வில் பதிவு செய்­யப்­பட்ட குழந்தை பிறப்பு விகி­தம் உண்­மை­யான குழந்­தை பிறப்பு விகி­தத்­தைக் காட்­டி­லும் குறை­வா­கவே இருக்­கும்.

கார­ணம், எல்லா பெற்­றோர்­களும் தங்­க­ளது குழந்தை பிறப்­பைப் பதிவு செய்வ­தில்லை. ஒரு பிள்ளை மட்­டுமே பெற்­றுக்­கொள்ள வேண்­டும் என்ற விதி சீனா­வில் நீண்ட கால­மாக இருந்து வந்­தது.

ஆனால், மக்­கள்­தொகை வேக­மாக மூப்­ப­டைந்து வரு­வ­தா­லும் அதன் மூலம் ஊழி­ய­ரணி சுருங்­கும் என்ற அச்­சத்­தா­லும் 2016ஆம் ஆண்டு சீன அர­சாங்­கம் ஒரு குழந்தை விதி­யைத் தளர்த்­தி­யது.

ஒவ்­வொரு குடும்­ப­மும் இரு பிள்­ளை­க­ளைப் பெற்­றுக்­கொள்ள அனு­மதி அளிக்­கப்­பட்­டது. இருந்த போ­தி­லும் பிறப்பு விகி­தம் சரிந்­த­வாறே தொடர்­கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!